தமிழ் சினிமா:-
கடந்த 10 வருட காலமாக தமிழசினிமாவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மோலிவுட் என்று தனித்தனி மொழிகளில் படம் இயக்கி தயாரித்துவந்தனர். வேறு மொழிகளிலிருந்து மற்ற மொழிகள் நடிக்க வர மாட்டார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாற தொடங்கியது. பான் இந்தியா மூவிஸ் என்று அழைக்கப்படும் பிற மொழி நடிகர்கள் மற்றும் குழுவினர் தமிழ் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளனர்.
மணிரத்னம்:-
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அடுத்ததாக இருக்கும் ஐகானிக் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தான். தமிழ் அல்லது பிறமொழிகள் நடிகர்கள் ஒரு தடையாவது மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எல்லா மொழிகளில் உள்ள நடிகர்கள் உள்ளது. பிற மொழிகளில் உள்ள நடிகர்களை வைத்து படம் பண்ணவர் இயக்குநர் மணிரத்னம்
பம்பாய்:-
1995ல் வெளிவந்த படம். இந்த படத்தில் பாலிவுட் ஹீரோயின் மனிஷா கொய்ராலா, ஹீரோ அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சோனாலி பேந்திரே, டின்னு ஆனந்த், நாசர் மற்றும் பலர்.
உயிரே:-
1998ல் வெளிவந்த படம். இந்த படத்தில் பாலிவுட் கிங் கான் கதாநாயகன் ஷாருக்கான், கதாநாயகி மனிஷா கொய்ராலா, பிரீத்தி சிந்தா, மலைக்கா அரோரா மற்றும் பலர். இந்த படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் ஏ. ஆர். ரகுமான் அவர் கொடுத்த பிஜிஎம் மற்றும் பாடல் பட்டி தொட்டிகளில் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதில் Chaiyya Chaiyya என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் கொடுத்த பாடல் ஏ. ஆர். ரகுமானுக்கு.
இருவர்:-
1998ல் வெளிவந்த படம். இந்த படத்தில் அரசியல் ஜாம்பவானாகத் திகழ்ந்த எம் கருணாநிதி, எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா நிஜ வாழ்க்கையில் நடந்த கதைக் கரு வைத்து எடுக்கப் பட்ட படம் தான் இருவர் இந்த படம் வெளிவந்தபோது பலதரப்பட்ட சர்சைககள் இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து வெற்றி பெற்றது இந்த படம்.
ஷங்கர்:-
பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கர். இவர் எடுக்கும் படங்களில் மிகப் பிரம்மாண்டமாக செட் இருக்கும் அதே போல் கதையும் பிரம்மாண்டமாக இருக்கும். பெரும்பாலான படங்களில் VFX கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று அழைக்கப்படும் தொழினுட்பம் மிகச் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பார். தென்னிந்தியா சினிமாவில் இவர் VFX கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வல்லவர். இவர் பட்ஜெட் வழக்கம் படங்களிலிருந்து தனித்துக் காணப்படும் சில படங்கள் சப்ஜெக்ட் வெறி தனமாக எழுதியிருப்பார். இவர் இயக்கி பெருதும் பேசப் பட்ட படம் இந்தியன், காதலன், ஜென்டல் மென், ஜீன்ஸ், முதல்வன், நண்பன், சிவாஜி தி பாஸ், எந்திரன், ரோபோ 2, ஐ தற்போது இயக்கும் படங்கள் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர். இவர் மாபெரும் வெற்றி கொடுத்த படம் ஏராளம் ஆனால் இந்த படங்கள் மிகவும் பேசப்பட்டது.
இந்தியன் 1
1996ல் வந்த படம் அந்த கால கட்டத்தில் இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்ற பிரமிப்பை உருவாக்கியவர் இயக்குநர் ஷங்கர். இந்த படத்தில் ஆண்டவர் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோண்த்கர், கௌண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, சுகன்யா, கஸ்தூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் மிகச் சவாலான விஷயம் என்னவென்றால் கமல்ஹாசன் ஓல்ட் கெட்டப் தான் இந்த கெட்டப் கிராபிக்ஸ் இல்ல மேக்கப் என்று கண்டுபிடிக்கமுடியாது அந்த அளவுக்கு இருக்கும் படம்.
ஜீன்ஸ்:-
இந்த படத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் நாசர், பிரஷாந்த் டபுள் ஆக்ட் செம்மையாக நடிதுர்ப்பார் இவருக்கு நிகராக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். லட்சுமி, எஸ் வி சேகர், செந்தில் மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இவர் படத்தில் VFX கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று அழைக்கப்படும் தொழினுட்பம் மிக நுட்பமாகக் கையாண்டிருப்பார்.
எந்திரன்:-
இந்த படத்தில் ஷங்கர் முழுவதுமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் ஹுமனோய்ட் அனிமேட்ரானிக்ஸ் என்ற புது அம்சங்கள் கையாண்டிருப்பார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்கள். எந்திரனுக்கும் மனிதருக்கும் காதல் வையப்பட்டால் என்ன நடக்கும் என்று இந்த படத்தின் கரு. இந்த படம் 2010ல் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்தது. வெளிநாட்டுப் படங்கள் இணையாக ஷங்கர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கையாண்டிருப்பார்.
எஸ் எஸ் ராஜமௌலி:-
இவர் எடுத்த நான் ஈ, பாகுபலி என்ற படங்கள் நீங்கள் அறிந்தவை நீங்கள் அறியாத ஃப்ளாஷ்பேக். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் இயக்கிவந்தவர். இவர் தகப்பனார் விஜயேந்திர பிரசாத் இயக்குநரும் மற்றும் எழுத்தாளர் ஆவர். விஜயேந்திர பிரசாத் எழுதிய கதை மிகப்பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு வருமானம் இருந்தது ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய எஸ் எஸ் ராஜமௌலி தனக்குக் கிடைத்த எல்லா கீழ் மட்ட வேலைகள் செய்கிறார். பின்பு அவர் மெட்ராஸ் ஏவிஎம் ஸ்டுடியோவில் எடிட்டிங் மற்றும் சவுண்ட் இன்ஜினியரிங் எப்படி என்று கற்றுக் கொண்டார் அதைத் தொடர்ந்து ஹைதராபாத் உள்ள இயக்குநர் ராகவேந்திரா ராவ் கீழ் உதவி இயக்குனராக பணியாற்றிவந்தார் பின்பு ராஜமௌலி கடின வேலையைப் பார்த்து ஸ்டுடென்ட் நம்பர் 1என்ற படத்துக்குக் கதை எழுதினார் அந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் முதல் படம் அந்த படம் பட்டி தொட்டிகளில் ஹிட் கொடுத்த படம் ஆனால் ராஜமௌலி அந்த அளவுக்குப் பெயர் வரவில்லை. அதைத் தொடர்ந்து தெலுங்கு நகைச்சுவை நடிகர் வைத்து எடுத்த படம் தான் Maryada Ramanna இந்த படமும் பயங்கர ஹிட் கொடுத்த படம். நாணி மற்றும் கிச்சா சுதீப் வைத்து நான் ஈ என்ற படம் எடுத்தார் அந்த படத்தில் ஈ தான் ஹீரோ திரையுலகைச் சேர்ந்த நிறையப் பேர் இவரைத் திட்டி தீர்த்தனர் ஆனாலும் படம் ஹிட் அதைத் தொடர்ந்து பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் எடுத்தார் 1600கோடி வசூல் செய்து இந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரில் இவரும் ஒருவர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
பாகுபலி:-
ராஜமௌலி இயக்கத்தில் 2015 வெளிவந்த பாகு பலி திரைப்படம் அணைத்து மொழிகளில் இருக்கும் ரசிகர்களுக்கும் கவர்ந்துள்ளது . தெலுங்கு படம் என்றாலும் பிற மொழிகள் நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் இயக்குநர் ராஜமௌலி நன்றாக எல்லா கதாபாத்திரங்களையும் இயக்கியிருப்பார். இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்கள் அம்சமாக பொரிந்திருக்கும் பாகுபலி பிரபாஸ், தேவசேனா அனுஷ்கா, பல்லாலதேவா ரானா தக்குபாடி, ரம்யா கிருஷ்ணன் சிவகாமி, பிஜ்ஜலதேவா நாசர், அவந்திகா தமன்ன்னா மற்றும் பலர்