இந்தியத் தமிழ் சினிமாவில் கே.பாலசந்தரை தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தவகையில் அவர் புகழ் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளமை யாமறிந்ததே. தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் எனப்போற்றப்படும் இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் நடிகர், மேடை அமைப்பாளர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். இவர் தமிழ் மொழி மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலுமே திரைப்படங்கள் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது, இந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தமை மட்டுமன்றி சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி எதிர்கால இளங் கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.
கே பாலச்சந்தர்
கே.பாலசந்தரின் திரைவாழ்க்கை 59 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக ஆரம்பமானது. இதனைத்தொடர்ந்து 1965ம் ஆண்டு; இவர் இயக்கி முதலில் திரைத்துறையில் வெளியான திரைப்படம் நீர்க்குமிழி;. இதில் நகைச்சுவை பெருஞ்சுவர் என வர்ணிக்கப்படும் நடிகர் நாகேஷ்; கதாநாயகனாக நடித்தார்.
இவர் இயக்கிய அநேகமான திரைப்படங்களில் மனித வாழ்க்கையில் அவர்கள் உறவுகளுக்கிடையில் எதிரந்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் என்பனவே முக்கிய கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது. புதுப்புது அர்த்தங்கள 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை பாலசந்தர் இயக்கினார்.
1990 இல் வெளியான ஒரு வீடு இரு வாசல் இந்திய தமிழ்த் திரைப்படம் கே. பாலசந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கணேஷ் , யாமினி, சூர்யா, வைஷ்ணவி , குமரேஷ் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இரு தனித்தனிக் கதைகளைக் கொண்டது. இரண்டிற்குமான இணைப்பு படத்தின் இறுதியில் காட்டப்படுகிறது. மூலக்கதை தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய புதினமாகும். இத்திரைப்படம் பிற சமூகப் பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான 38 ஆவது தேசிய திரைப்பட விழாவில் தேசிய விருதைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் இரு தனிக்கதைகளை உள்ளடக்கியது. இரு கதைகளும இச் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதியை சித்தரிக்கிறது. இப்படத்தில்; நடித்த இருநாயகிகளும் தங்கள் கணவர்களால் தாம் எதிர்நோக்கும் துன்பங்களை ஒரு எல்லைக்கு மேல் தாங்க முடியாமல் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையைத் துணிவுடன் எதிர்நோக்குகின்றனர்.
பெப்சி உமா:-
1994 இல் வெளிவந்த டூயட் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார். இத்திரைப்படத்தில் முதலில் பிரபுவிற்கு இணையாக நடிக்க பாலசந்தர் பெப்சி உமாவை தீர்மானித்தார். அப்போது பெப்சி உமா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். சில காட்சிகளை சுகன்யாவை வைத்து எடுத்த போதும் அவரின் முக தோற்ற சாயலில இருந்த இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திரியின் முகம் பாலசந்தரின் நினைவிற்கு வந்தது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தார். இதனையடுத்து சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திரி மூன்றாவது முறை கதாநாயகியாக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார். திரைப்படங்கள் மட்டுமன்றி 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய இவரின் தூர்தர்ஷனில் வெளிவந்த “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரை பிரசித்தி பெற்ற படைப்புகளாகும்.
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்
தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தவர். கமலுக்கு வரிசையாக வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.நடிகர் கமல் தான் தன் தந்தையின் மடியில் தவழ்ந்ததை விட கே.பாலசந்தரின் மடியில் தவழ்ந்த நாட்களே அதிகம் என அடிக்கடி கூறுவதுண்டு. ஸ்ரீதரைப் போலவே இயக்குனர் பாலச்சந்தரும், தமது ஆரம்ப மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை, மிக அதிகமாக பயன்படுத்தியிருந்தார். வெள்ளி விழா, தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.
பாரதிராஜா மற்றும் மணிரத்னம்
தமது முன்னோடி எப்போதும் இயக்குனர் ஸ்ரீதர் என பல நேரங்களில் அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில், அவர் பாராட்டி பேசிய பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்தி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அரங்கேற்றம் என்னும் திரைப்படம் 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கியத்தில் வெளிவந்து அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.
கே பாலச்சந்தரின் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு அரசாங்க கிராம உத்தியோகத்தராக பணியாற்றி வந்தார்.
தனது பாடசாலை படிப்பை சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி நன்னிலத்தில முடித்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம்.எஸ்.உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். “கவிதாலயா” என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதனையடுத்து பல இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பாலசந்தர் இயக்கத்தில் உருவான “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார்.நடிகர்களான ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்ற நடிகர்களை பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே. நடிகர் திலீப் வறுமையின் நிறம் சிகப்பு படத்திலும் நடிகர் திலீப்; நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான போதும் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. ஆனாலும் பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.
ஏற்கெனவே நாடக மேடையில் புகழ் பெற்றவர்களான எஸ்.வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய்.ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என்போரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். இவரின் அநேக படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது. எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.
மேலும் இவர் நாடகத்தைத் தொடங்கும் போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகம் ஆரம்பமாகும். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது. ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ குறளும் குரலும் ஒலித்துவிடும். பின்னர், ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தது. எம்ஜிஆரின் பக்கமே செல்லவில்லை. பின்னர், ‘எதிரொலி’யில் சிவாஜியை இயக்கினார். அடுத்து சிவாஜி பக்கமும் செல்லவில்லை. ‘சர்வர் சுந்தரம்’ இவரின் கதை, வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கி வந்தது. படம் முழுக்க, பாலசந்தரின் ஸ்டைல் பளிச்சிடும்.
பாலச்சந்தரின் புகழ்பெற்ற படைப்புகள்
‘தில்லு முல்லு’ ‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்ரகாந்த்’, ‘தண்ணீர் தண்ணீர்’ ‘இருகோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, , ‘புன்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி¬’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’
1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது
இவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’ 2005ம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2005 ம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2007ம் ஆண்டு; சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் வழங்கப்பட்டது.
‘தேசிய விருதுகளை’ 1969- ம் ஆண்டு; ‘இருகோடுகள்’, 1975 ம் ஆண்டு; ‘அபூர்வ ராகங்கள்’, 1981 ம் ஆண்டு; ‘தண்ணீர் தண்ணீர்’, 1984 ம் ஆண்டு; ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988 ம் ஆண்டு; ‘ருத்ரவீணா’, 1991- ம் ஆண்டு; ‘ஒரு வீடு இருவாசல்’, 1992 ம் ஆண்டு; ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக வென்றுள்ளார். மேலும், 2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது. ‘ஃபிலிம்பேர் விருது’ 1981ம் ஆண்டு “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. 1974 ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975 ம் ஆண்டு; ‘அபூர்வ ராகங்கள்’, 1978 ம் ஆண்டு ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980ம் ஆண்டு ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981 ம் ஆண்டு; ‘தண்ணீர் தண்ணீர்’, 1984 ம் ஆண்டு; ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985 ஸ்ரீம் ஆண்டு ‘சிந்து பைரவி’, 1989 ம் ஆண்டு; ‘புது புது அர்த்தங்கள்’, 1991 ம் ஆண்டு; ‘வானமே எல்லை’, 1992 ம் ஆண்டு; ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்தியாவின் ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும் , 1995 ம் ஆண்டு; ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. 1968ம் ஆண்டு; ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம் , 1978ம் ஆண்டு; ‘தப்பு தாளங்கள்’ , 1980ம் ஆண்டு; ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980ம் ஆண்டு; ‘அக்னி சாட்சி’.
1989ம் ஆண்டு; ‘புது புது அர்த்தங்கள்’ , 1992ம் ஆண்டு; ‘வானமே எல்லை’ , 1992ம் ஆண்டு; ‘ரோஜா’ 1993ம் ஆண்டு; ‘ஜாதி மல்லி” போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது, ‘அண்ணா விருது, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது, ‘எம்.ஜி.ஆர் விருது” , ‘கலைஞர் விருது, ‘திரைப்பட உலக பிரம்மா, ‘பீஷ்மா விருது, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
இவர் தனியே திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாமல் , தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் , நடிகர் , மேடைநாடக இயக்குனர் , தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட ‘சகலகலா வல்லவராக விளங்கிய வராவார். தென்னிந்திய தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவர்களில் இவரும் ஒருவர். திரைப்படத்துறையில் தனக்கென சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கித்; தனி முத்திரைப் பதித்த அவர் வருங்கால இயக்குனர்களுக்கு ஆசானாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்த கே.பி. என்றும் இயக்குநர் சிகரம் என்றும் அழைக்கப்பட்ட பாலச்சந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் சிறுநீர் குழாயில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி 24ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சரத்குமார், மற்றும் பல பல அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பட பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.