director-shankar-rare-photo-trending-game-changer-indian2

இயக்குனர் ஷங்கரின் கேம் செஞ்சர் பிளான் ?

இயக்குனர் ஷங்கர்:-

தென்னிந்திய சினிமாவின்; பிரம்மாண்டத்திற்கு மற்றுமொரு பொருள் இயக்குனர் ஷங்கர் என்று கூறலாம். அந்தவகையில் அவரின் பிரமாண்டம் உலகம் அறிந்ததே. இயக்குனர் ஷங்கர் படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம் மற்றும் அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. இவர் திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முனனர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுளளார். இயக்குனர் ஷங்கர் திரையுலகில் முதன் முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் காலடி எடுத்து வைத்தார ஆனால் காலம் அவரை சிறந்த இயக்குனராக மாற்றிவிட்டது.

இவர் தேவையில்லாமல் சும்மா சும்மா தயாரிப்பாளர் பணத்தை செலவு செய்கிறார். ஏதற்காக இவ்வளவு பணத்தை வீணடிக்க வேண்டும்;? ஏதற்காக தேவைக்கும் மேலதிகமாக பணத்தை செலவு செய்ய வேண்டும் என ஷங்கரின் ஒவ்வொரு திரைப்பட ஷூட்டிங் நேரத்திலும் பேசாதவர்கள் இல்லை. நாம் எல்லோரும் அறிந்தது இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் ஷங்கர் என்பது மட்டுந்தான். ஆனால் ஷங்கருக்கு யாருக்கும் தெரியாத இன்னொரு முகம் இருக்கிறது. இது பலருக்கு தெரிந்தாலும் இதைகுறித்து யாரும் பெரிதாக பேச மாட்டார்கள்.

1963ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர். ஆவர் வாழ்ந்த சூழலில் தன்னை சுற்றி பலத்தரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பார்த்து, அதனுடனேயே அவர் வளர்ந்தவர் என்பதால் தானோ அவர் இயக்கும் கதைகளிலும் மக்களின் வலியும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், உணர்வும் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம். ஷங்கரின் இந்த சமூகத்தின் மீதிருக்கும் பார்வை மற்றும் அது சம்பந்தப்பட்ட உணர்வு, இதுவரை வேறெந்த இயக்குனரும் தங்கள் கதைகளில் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம். ஜெண்டில்மென் முதல் 2.0 வரை… அவர் இயக்கிய திரைப்படங்கள் மூலமாக தான் தனியே இயக்குனர் மட்டுமல்ல, மனிதநேயமிக்க ஒருவர் என்பதை ஷங்கர நிரூபித்துக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சில திரைப்படங்கள் நடிகர், நடிகைக்காக வெற்றி அடையும், மேலும் சில திரைப்படங்கள் கதைக்காக வெற்றி பெறும். ஆனால் ஷங்கர் படங்களை பார்த்தால் நடிகர்கள், கதை மட்டுமின்றி படத்தின் பிரமாண்டத்திற்காகவே வெற்றி அடைந்து விடும். எவ்வாறான படங்கள் இருந்தாலும் தமிழில் இயக்குனர் ஷங்கரின் படங்கள் இதுவரை பிரமாண்டத்தின் உச்சியையே தொட்டுள்ளது. அந்த வகையில் அவரின் சிறந்த படங்களையும் அவற்றின் கருப் பொருளையும் பார்ப்போம்.

ஷங்கரின் படங்களும் அவற்றின் கருப்பொருளும்:-

ஜெண்டில்மென்:-

ஷங்கருக்கு முன் எந்த ஒரு இயக்குனராவது தங்கள் முதல் படத்திலேயே அதாவது தாம் இயக்கும் முதல் திரைப்படத்திலேயே அரசியல் கதையம்சத்தை கையில் எடுத்திருக்கிறார்களா? என்று நாம் தேடித் தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் 1980, 1990, 2000.. ஆம் ஆண்டு ஏன் தற்போதும் கூட சில கல்லூரிகளில் சீட்டு வாங்க தகுதியிருந்தும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள்; சிபாரிசை வாங்க இயலாத காரணத்தால், விரும்பிய படிப்பை படிக்க முடியாமல், மனமுடைந்து மன வருத்தத்துடன் வேறு வழியின்றி எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான மாணவர்கள். அதுமட்டுமல்லாமல் நுழைவு தேர்வில் ேதிய ரீதியான கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றிருந்தும் கூட மர்மமான முறையில் இறக்கும் மாணவர்களை கண் கூடாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தேர்வில் முதலிடத்தை பெற்றவர் தான் விரும்பிய பாடத்தை படிக்காமல் ஏன் அவன் தற்கொலை செய்யப் போகிறான். இதெல்லாம் இந்தியாவில் நடக்கும் கல்வி ஊழல் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டிய திரைப்படம் தான் ஜெண்டில்மேன். இத்திரைப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், வினீத், மனோரமா, மா.நா.நம்பியார் என பலர் நடிடத்திருந்தனர். தெலுங்கில் ஜென்டில்மேன் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதே படத்தலைப்புடன் இந்தியில் உருமாற்றபட்டது.

 

இந்தியன்:-

நடிகர் கமல் நடித்த மிகப் பிரமாண்டமான திரைப்படம் தான் இந்தியன். இத்திரைப்படத்தின் மூலக்ருவே லஞ்சத்தை ஒழிப்பதை நோக்கமாக கொண்டு தயாரிக்கபட்டதாகும். பிற நாடுகளில் வேலையை செய்யாமல் இருக்கவே தான் லஞ்சம் வாங்குறார்கள். இந்தியாவில் மட்டும் தான் தங்கள் கடமையை செய்யவே லஞ்சம் வாங்குறார்கள்;. எவ்வளவு காலம் கழித்து நாம் திரும்பிப் பார்த்தாலும் இந்த வசனத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்து அரச அதிகாரிகளான பொருச்சாலிகள் எங்கேயாவது ஒரு மூலைமுடுக்கில் தாங்கள் கைகொப்பம் போடும் கோப்புகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கும். அரசாங்கத்திற்கு உண்மையாக இருக்க வேண்டிய அரசியல் வாதிகளே சில பல பேரிடம் கோடிகளில் லஞ்சம் வாங்கினால் அரசாங்கத்தின் சக்கரங்களாக கருதப்படும் அரச உத்தியோகத்தர்கள் ஆயிரக்கணக்காணோரிடம் நூறு, ஆயிரம், இலட்சம் என லஞ்சம் வாங்குகிறார்கள். மொத்தத்தில் அரசியல் வாதிகளுக்கு இணையாக அரச உத்தியோத்தர்களும் நெறி கெட்டு கிடக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதே இப்படத்தின் நிதர்சனமான உண்மை. பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை லஞ்சம் பரவிக் கிடைக்கிறது. மொத்தத்தில் லஞ்ச பெருச்சாலிகளை ஒழிப்பதே இத்திரைப்படத்தின் நோக்கமாகும். இதில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல் அருமையாக நடித்திருப்பது யாமறிந்ததே. கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்த்கர், கவுண்டமணி, செந்தில என பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தியில் ஹிந்துஸ்தானி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் பாரதியுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

முதல்வன்:-

முதல்வன் திரைப்படம் அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை குறித்து பேசிய ஒரு யதார்த்தமான படம். அரசைக் அக்குவேறு ஆணிவேராக ஆட்டிப்பார்த்த ஒரு திரைப்படம். ஷங்கரே முதல்வனை நினைத்தாலும் முதல்வன் போன்ற ஒரு திரைப்படத்தை எதிர்காலத்தில் இயக்க முடியுமா என்பது சந்தேகமே. முக்கால்வாசி அரசியல்வாதிகளுக்கு ஒரு வசனம் பேசினாலே மூக்கு வியர்த்துக் கொண்டு, அவர்கள் தங்களை தான் கோடிட்டு காண்பிக்கிறார்கள் என்ற கோபம் வருகிறது. பாடசாலை நாட்களில் வீட்டுப்பாடம் செய்யாதவர்கள் எழும்புங்க என்று சொல்லி கதிரை மேல் ஏறி நில்லுங்க என்று சொன்னா முடு வகுப்புமே எழுந்து நிற்பது போலத்தான் இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில்; ஊழல் செய்தவர்கள், அந்தளவிற்கு கச்சிதமாக எடுத்துக்காட்டாக முதல்வனில் ஷங்கர் வசனங்களை எடுத்துக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. என் வேலையை தானே நான் செஞ்தேன். அதுக்கு ஏன் என்ன அடிக்கிறாங்க…? என்ன போலவே என் நாடும் இப்படி ஊனமா இருக்கு எழுந்து நிக்க வை தலைவா? இந்த வசனமெல்லாம் வெறும் திரைப்படத்திற்கான வசமாக மட்டும் நாம் காணலாகாது அதைவிடுத்து தங்கள் கையாளத்தனத்தை, முன்னைய ஆட்சியாளர்கள் மீது சுமத்தும் அரசியல் தலைவர்கள் தான் தற்போது இங்கே நாட்டை ஆட்சி செய்துகொண்டுள்ளார்கள் என்பதை நன்றாக இந்தப்படத்தில் இயக்குனர் காட்டியிருப்பது தான் நிதர்சனம். அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா என பரை’ நடித்துள்ளனர். தெலுங்கில் இத்திரைப்படம்ட ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

 

அந்நியன்:-

நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பித்து வாங்கும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவை தரமாகத்தான் இருக்கின்றதா? என எப்போதாவது நாம் பரிசோதித்த்து பார்த்து வாங்குகிறோமா? அன்றி பேரம் பேசுவதை விடுத்து இப்பொருள் தரமானதா என நாம் பரிசோதித்திருக்கின்றோமா ? அவ்வாறு பரிசோதித்திருந்தால் இன்று இப்படி போலிகள் இந்தளவிற்கு வளர்ந்திருக்காது. அரச அதிகாரிகளிடம் மட்டுமே தப்பு இருக்கின்றது என்பது இல்லை மாறாக மக்களிடமும் இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கிய ஒரு சூபபர் திரைப்படம் என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் சில ஆயிரம் வரி ஏய்ப்பு செய்ய, இல்லாத வாடகையை சேர்க்கிறோம், திருட்டின் அளவை வைத்து நான் சிறிதாக திருடுவதால் சின்ன திருடன் அவன் அதிகமாக திருட்டு வேலை செய்கிறான் என்று திருட்டின் அளவை வைத்து இன்னொரு திருடள் மீது புகார் சொல்ல முடியாதது போலவே எல்லோரும் ஒரே நிலையில் தான் இருக்கிறோம். இதனால் இங்கே ஆட்சி செய்பவர்கள் யோக்கியமானவர்களா என நாம் கேட்பதற்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் யோக்கியமானவர்களா என யோசித்து பார்க்க வேண்டியது மிக அவசியம். எத்தனை பேர் வரியை நியாயமாக செலுத்துகிறோம்?, தப்பு என்ன பனியன் அளவா? ஸ்மோல், மீடியம், லார்ஜ் என கணிக்க, விளைவுகள் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் என்று நெத்தியடியாக மண்டையில் உரைக்க கூறியவன் அந்நியன். விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், யானா குப்தா, நாசர், நெடுமுடி வேணு என பலர் நடித்துள்ளனர். இந்தியில் இத்திரைப்படம் அபரிசித் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் இத்திரைப்படம் அபரிச்சித்துடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

 

சிவாஜி:-

நீங்களும் செய்மாட்டீங்க (அரசு) எங்களையாவது நல்லது செய்ய விடுங்க என்று கெஞ்சினாலும்… இவங்களுக்கு நல்லது பண்ண நீ யாருடா. நீங்க இலவசமா கல்வி, மருத்துவம் கொடுத்தா அதன்பின்னர் நாங்கள் எப்படி எங்க பிழைப்ப நடத்துறது இன்று வரை அரசாங்கள் இலவசமாக கல்வி மற்றும் மருத்துவத்தை கொண்டு வராம இருப்பதற்கு முதல் காரணம் அதில் பெரும்பங்கு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர்களே அரசியல்வாதிகளும் அவர்கயை சுத்தி உள்ளவர்களும் தான் என்பதை மிக தெளிவா சொல்லிய திரைப்படம் தான் சிவாஜி. இந்தியாவை பல ஆண்டுகளாக வல்லரசு நாடாக முடியாமல் தடுத்து இருப்பதற்கு முதற்காரணமே கருப்புப்பணம் என்ற ஒன்று தான், நம்மில் சில பேரால் தான் இந்த நிலைமை. ஆயிரங்களில் வரி செலுத்த நாமே இப்படி யோசிக்கிறோம் என்றால், சம்பாதிப்பதில் ஒரு பங்கினை கோடிகளில் வரியாக செல்லுத்த எப்படி எல்லாம அவன்; யோசிப்பான். யாரும் யாரையும் கேள்வி கேட்கக்கூடாது அதாவது ஆட்சிக்கு எந்த கட்சி வந்தாலும், எதிர்க்கட்சி வாய் திறக்காது. காரணம், அவரவர் ஆட்சியில், இருக்கும் போது தம்மால் முடிந்த ஊழலை செய்துவிட்டு தான் நகர்கிறார்கள். நீ ஆட்சிக்கு வந்தால் என்னை கேள்விக் கேட்காதே அதேபோல் நான் ஆட்சிக்கு வந்தால் உன்னை கேள்விக் கேட்க மாட்டேன் என்ற ஒரு மனப்பாடோரு அரசியல் கட்சிகள் இயங்கி வருகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக உரைத்தது இந்த சிவாஜி. ரஜினிகாந்த், ஷ்ரியா, விவேக், சுமன், மணிவண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கில் சிவாஜி தி பாஸ் என மொழிமாற்றம் செய்யப்பட்டது

2.0:-

அரசாங்கம் மற்றும் மக்கள் செய்யும் தவறுகள் ஒரு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றால். இக்காலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளில் நடக்கும் தவறுகள் உலகையே அழிக்கும் அச்சுறுத்தலை அளிக்கிறது. தொழில்நுட்பத்தால் அழிந்த உயிரினம் சிட்டுக்குருவி மட்டுமா?. பல கோடி ஆண்டுகளாக அழகாக சுழன்று வந்த பூமிக்கு இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் என்ன? யாருக்காவது தெரியுமா? தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் வளர்ச்சி கண்டன. அதற்கான காரணம் என்ன தெரியுமா? கடந்ந இரண்டு நூற்றாண்டுகளில் நாம் செய்த சாதனையின் காரணத்தால் தான், வட துருவம், தென் துருவம் முற்றிலுமாக அழியும் தருவாயில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. உலகில் பெரும்பாலான இற்கையை அழித்துவிட்டோம். ஓசோன் மண்டலத்தில் துளையிட்டோம், காட்டை அடியோடு அடித்தோம், கடலில் உள்ள உயிரினங்களை முற்றாக அழித்தோம். சாப்பிடும் சாப்பாட்டில் ஆரம்பித்து அணியும் ஆடை வரை , வதியும் இல்லம் என நம்மை மேம்படுத்த எம்மை சூழவுள்ள இயற்கையை முழுவதுமாக அழித்து விட்டோம், ஆரசியல்வாதிகள்; சீர்கெட்டால் மக்கள் அழிவார்கள், அரசாங்கம் சீர்கெட்டால் நாடு அழியும், தொழில்நுட்பம் சீர்கெட்டால் இவ்வாறு உலகமே அழியும் என்பதை தனது பாணியில் மிக அழகாக ஷங்கர் இத்திரைப்படத்தில் எடுத்துக் கூறியிருப்பார்.ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்திய சினிமாவில் மிக அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படம்.

 

1994ஆம் ஆண்டு Kadhalan (காதலன்) பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ். பி. பாலசுப்ரமணியம், ரகுவரன், ஆகியோர் நடித்தனர். ஹிந்தியில் “ஹம்சே ஹை முக்காபலா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் ப்ரேமிகுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

1998ஆம் ஆண்டு Jeans (ஜீன்ஸ்) பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராஜ{ சுந்தரம், லக்ஷ்மி ஆகியோர் நடித்தனர். இந்தியில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் இத்திரைப்படம் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

2003ஆம் ஆண்டு (பாய்ஸ்) சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல் மி ஆகியோர் நடித்தனர். தெலுங்கில் பாய்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டு Nanban (நண்பன்) திரைப்படத்தில் விஜய், ஸ்ரீரீகாந்த், ஜீவா, இலியானா, சத்யராஜ் த்ரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.

2015 ஆம் ஆண்டு (I Movie ) ஐ விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது இவரது இயக்கத்தில் கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்கள் உருவாகி வருகிறது. மக்கள் மத்ததியில் பெரும் எதிர்பார்ப்பில் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது.

பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா இயக்குனர் ஷங்கரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் வில்லன் எஸ்.ஜே. சூர்யா தான் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *