super-star-rajinikanth-thalaivar171-trending

ஜெயிலர் ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கை வரலாறு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:-

தென்னிந்திய சினிமாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த், இந்தியாவின் திரைப்படத் துறையில் மாபெரும் புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் ஆரம்பித்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘போக்கிரிராஜா’, ‘பில்லா’, ‘தில்லு முல்லு’ , ‘முரட்டுக்காளை’, ‘மூன்று முகம்’, ‘பணக்காரன்’, ‘வேலைக்காரன்’, ‘தர்மத்தின் தலைவன்’ , ‘மனிதன் , ‘குரு சிஷ்யன்’ ‘மிஸ்டர் பாரத்’, ‘நல்லவனுக்கு நல்லவன், ‘எஜமான்’ ‘ஊர்காவலன்’, ‘எங்கேயோ கேட்டகுரல்’,’ ‘நான் சிவப்பு மனிதன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’ படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘மாப்பிள்ளை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘பாண்டியன்’ , ‘அண்ணாமலை’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத சில திரைபடங்களாகும். இந்தியாவில் மாத்திரமல்லாமல், வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகர். ஜப்பானில் சூப்பர் ஸ்டாருக்கு எண்ணிடலடங்கா ரசிகர்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
தன்னுடைய வாழ்க்கையை ஒரு பஸ் கண்டக்டராக ஆரம்பித்து, ஏராளமான இன்னல்கள், கஸ்டங்கள் அனைத்திற்கும் பின்னர் திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக இன்று வரை தன்னிலை நாட்டியுள்ள ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களுாரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் ‘சிவாஜி ராவ் கைக்வாட்’ என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் , 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் நாள்; நான்காவது மகனாக ஒரு “மராத்தி” குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும இரண்டு சகோதரர்களும்; உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:-

ரஜினிகாந்த் அவருடைய ஐந்தாவது வயதிலேயே தாயை இழந்தவர், தனது பாடசாலை படிப்பை இந்தியாவின் பெங்களுாரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” முடித்தார். இவர் தனது சிறு பராயத்தில் இருந்தே மிகவும் துணிச்சல் உள்ளவராகவும் பயம் அற்றவராகவும் இருந்தார். பாடசாலைப்படிப்பை முடித்த பிறகு, ஒரு பஸ் நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து அதனைத்தொடர்ந்து பல மேடை நாடகங்களிலும் நடித்தார். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு காலப்போக்கில், சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

திரைப்படத்துறையில் நடிகனாக ரஜினிகாந்த்:-

சென்னைக்கு வந்தும் ஆரம்பத்தில் பல துன்பங்களை சந்தித்த ரஜினிகாந்த் நண்பர் ஒருவரின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த அவர், “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில 1976ல்; நடித்தார். பின்னர் அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” என்ற திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது. இத்திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படத்தில் சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் ஸ்டைலினை அற்புதமாக செய்திருப்பார். அதனைத்தொடர்ந்து ‘அவர்கள்’ 1977ஆம் ஆண்டு, ’16 வயதினிலே’ மற்றும் 1977ஆம் ஆண்டு ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

கதாநாயகனாக ரஜினிகாந்தின் வெற்றிப் பயணம்:-

‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியாகி அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றியை பெற்றார். மேலும் ‘போக்கிரிராஜா’, ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’, ‘தனிக்காட்டு ராஜா’ போன்ற திரைப்படங்களில் அதிரடி கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக இவர் வெளிப்படுத்தியிருப்பார். ‘நல்லவனுக்கு நல்லவன்’ , ‘தர்மத்தின் தலைவன்’, ‘வேலைக்காரன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத,; ‘மூன்று முகம்’, மற்றும் ‘நான் சிவப்பு மனிதன்’ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில், இவருக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தை 1985ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” திரைப்படம் பெற்றுத்தந்தது எனலாம். இத்திரைப்படத்தில் “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து, ‘ஊர்காவலன்’, ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’ , ‘மனிதன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘குரு சிஷ்யன்’, ‘ராஜாதி ராஜா’, ‘மாப்பிள்ளை’, ‘ராஜா சின்ன ரோஜா’,போன்ற திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.

மேலும் இவரின் நடிப்பில் 1990 களில் வெளிவந்த ‘பணக்காரன்’, ‘பாண்டியன்’ ‘எஜமான்’, ‘அதிசயப்பிறவி’, ‘பாட்ஷா’, ‘மன்னன்’, ‘தர்மதுரை’, ‘தளபதி’ ‘அண்ணாமலை’, ‘உழைப்பாளி’, ‘வீரா’ ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் மாபெரும் அந்தஸ்தான ‘சூப்பர்ஸ்டார்’ என்ற பெயரையும்; பெற்றுத்தந்தது எனலாம். இவரின் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த “முத்து” திரைப்படம், இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது. அதாவது ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றதுடன் அம்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும்; பெற்ற திரைப்படமாகும்.

இதனையடுத்து ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பில் 2002ஆம் ஆண்டு சுரெஷ் கிருஷ்ணா இயக்கம் மற்றும்;, ஏ.ஆர்.ரகுமான் இசை என வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் பெரும் வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதனைத்தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில 2005ஆம் ஆண்டு; வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்று மாபெரும் வெற்றியீட்டியது. இதனையடுத்து 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கருடன் இணைந்து, பணியாற்றி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

 

ரஜினிகாந்தின் பிறமொழி திரைப்படங்கள்:-

ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழியில் மட்டுமல்லாமல்,இந்தியாவின் ஏனைய மொழிகளான கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘பாலு ஜேனு’ (1976) , ‘கதா சங்கமா’ (1976), ‘சகோதர சவல்’ (1977), ‘கலாட்டா சம்சாரா’ (1977), ‘ஒண்டு பிரேமதா கதா’ (1977 ‘குங்கும ரக்சே’ (1977), ‘தப்பிட தலா’ (1978), ‘கில்லாட் கிட்டு’ (1978), ‘மாது தப்படமகா’ (1978), ‘ப்ரியா’ (1979), ‘கர்ஜனே’ (1981) போன்ற கன்னட மொழித் திரைப்படங்களிலும், ‘அந்துலெனி கதா’ (1976), ‘தொலிரேயி கடிட்சண்டி’ (1977), ‘சிலக்கம்மா செப்பண்டி’ (1977), ‘ஆமே கதா’ (1977), ‘வயசு பிலிசிண்டி’(1978), ‘அன்னடம்முளு சவால்’ (1978), ‘அந்தமைனா அனுபவம்’ (1979), ‘இதாரு அசாத்யுலெ’ (1979), ‘அம்மா எவரிக்கைன அம்மா’ (1979), ‘டைகர்’ (1979), ‘மாயதாரி கிருஷ்ணடு’ (1980), ‘ராம் ராபர்ட் ரஹீம்’ (1980), ‘காளி’ (1980), ‘ஏதே நாசவல்’ (1984), ‘ஜீவன போராட்டம்’ (1986), ‘பெத்தராயிடு’ (1995) போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும், ‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ (1979), ‘கர்ஜனம்’ (1981) போன்ற மலையாள திரைப்படங்களிலும், ‘ஜீத் ஹமாரி (1983), ‘அந்தா கானூன்’ (1983), கங்குவா(1984), மேரி அதாலத்(1984), ஜான் ஜானி ஜனார்தன்(1984), ‘வஃபாதர்’ (1985), மஹா குரு’ (1985), ‘பேவஃபாய்’ (1985), ‘அசலி நகலி’ (1986), ‘பவான் தாதா’ (1986), ‘தோஸ்தி துஸ்மன்’ (1986), ‘உத்தர் தஷின்’ (1987), ‘இன்சாப் கோன் கரேகா’ (1987), ‘தமாசா’ (1988), ‘சால்பாஸ்’ (1989), ‘பிரஸ்டார்ச்சர்’ (1989), ‘கூன் கா கர்ஜ்’ (1991), ‘ஹம்’ (1991), ‘ஃபரிஸ்தே’ (1991), ‘பூல் பனே அங்காரே’ ‘(1991), ‘தியாகி’ (1992), ‘இன்சானியத் கே தேவதா’ (1993), ‘ஆதங்க் ஹீ ஆதங்க்’ (1995) போன்ற இந்தித் திரைப்படங்களிலும், ‘பாக்கியதேவ்தா’ என்ற பெங்காலித் திரைப்படத்திலும் ;ஆங்கில திரைப்படமான ‘பிளட் ஸ்டோன்’ 1988 ஆம் ஆண்டு நடித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் தொடர்பு:-

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது 1996 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்த அ.இ.ஆ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அந்தக்கட்சி தோற்றதற்கு இக்கருத்துகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதனையடுத்து ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள் எழுப்பபட்டாலும், அது தொடர்பில் இன்றுவரை அவரிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.

ரஜினியின் இமயமலைப் பயணம்:-

ரஜினிகாந்த் தனது வாழ்;க்கை வட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு படம் முடித்து அத்திரைப்படம்; வெளிவந்ததும் இமயமலைக்குச் சென்று, அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவருடைய வாழ்க்கையில் சினிமா, பணம், புகழ் என பல சிகரத்தை தொட்டுப்பார்த்தாலும், அவருக்கான தேடல் ‘இமயமலை பயணம்’ எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்:-

இந்தியாவில் மாத்திரமன்றி, உலக திரைப்படத்துறையிலும் பஞ்ச் டயலொக்ஸ் என்றால், அனைவர்; மனதிலும் நினைவுக்கு வருபவர், ரஜினிகாந்த் தான். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பாலும், பஞ்ச் டயலொக்காலும் ரசிகர்களை மேலும் மேலும் தன் பக்கம் கவர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் வெளிபடுத்திய ஒவ்வொரு டயலொக்கும் இன்றும் மக்கள் மனதில் அசையாமல் இடம் பெற்றுள்ளது.

விருதுகள்:-

  •  “தமிழக அரசு திரைப்பட விருது” 1978ஆம் ஆண்டு “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  •  “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக 1979ஆம் ஆண்டு “தேவர் விருது” வழங்கப்பட்டது.
  • தமிழக அரசின் “கலைமாமணி விருது” 1985ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • “எம்.ஜி.ஆர் விருது” 1989ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • “அண்ணாமலை” திரைப்படத்திற்காக 1992ஆம் ஆண்டு “அம்பிகா விருது” வழங்கப்பட்டது.
  • “அரிமா சங்கம் விருது” “முள்ளும் மலரும்” மற்றும் “16 வயதினிலே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சினிமா எக்ஸ்பிரஸ் விருது “நல்லவனுக்கு நல்லவன்”, “ஸ்ரீராகவேந்தரா”, “தளபதி”, “அண்ணாமலை”, “பிளட் ஸ்டோன்”, “வள்ளி”, “முத்து” “பாட்ஷா”, போன்ற திரைப்படங்களுக்காக வழங்கப்பட்டது.
  • ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்’ “முள்ளும் மலரும்”, “முத்து”, “மூன்று முகம்”, “படையப்பா”, “சிவாஜி” “சந்திரமுகி”, போன்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” விருது 2000ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தென்னிந்தியாவில் இப்போதும் தனக்கென ஒரு ஸ்டைலில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த்;, நடிப்புலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என இல்லாமல், தனது நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். கோடிக்கு மேலே கோடி பணம், புகழ், மற்றும் அந்தஸ்து என அனைத்தையும் அவர் கொண்டிருந்தாலும் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார். இவரின் வாழ்க்கைப் பயணத்தை வைத்துப் பார்க்கும் போது தன்னம்பிக்கை, விடாமுயற்சி கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்க்கையில் எந்நிலையில் இருந்தாலும் முன்னுக்கு வந்துவிடலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *