legend-director-maniratnam-trending-kamalhassan

நீங்கள் அறிந்திராத இயக்குநர் மணிரத்னத்தின் மறுபக்கம்

இயக்குநர் மணிரத்னம்:-

தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபல இயக்குனர்கள் வரிசையில் மணிரத்னமும்; ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் திரைத்துறையில் இயக்கம், திரைக்கதை, தயாரிப்பு, எழுத்தாளர் என பல்வேறு வகையில் பங்காற்றியுள்ள ஒரு படைப்பாளி என்றே கூறலாம். 1983 இல் ஆரம்பித்து 40 வருடங்களாக இன்று வரை தனது திறமையான படைப்பாற்றலால் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

ஒரு திரைப்படம் என்றால் திரைக்கதையையும் விட கலர் கலர் செட்டுகள், டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் இவர் அழுத்தமாக உணர்த்தினார்.

இவர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் திரைக்கதைகளில் காதல், அதிரடி என தனது படைப்புகளில் விதவிமான வேற்றுமைகளை காட்டி தயாரித்திருப்பார். மிக விஷேசமாக இவரது திரைக்கதை சுருக்கமான வசனங்களில், நடுத்தர மக்களின் பின்னணி, யதார்த்தமான நடிப்பு, மற்றும் எளிய தொழிலநுட்பத்தில் உருவாகும் திரைப்படமாகும்.

மணிரத்னம் பிறப்பு:-

மணிரத்னம் என திரையுலகில் அறியப்படும் இவரின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் என்பதாகும். 1956ஆம் ஜூன் 2ஆம் தேதி பிறந்துள்ளார். “வீனஸ் பிக்சர்ஸில்” என்ற திரையுலக திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் விநியோகஸ்தராக இவரது தந்தை கோபாலரத்தினம் பணியாற்றினார். இவரது குடும்பம் திரைக்குடும்பமாக இருந்தாலும் இவரது குடும்பத்தில் குழந்தைகள் திரைப்படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது

மேலும் இவர் குடும்பத்தில் திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு கெட்டபழக்கம் என்றே கருதியுள்ளார்கள். அத்தோடு மணிரத்னம் அந்த நாட்களில் நான் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்’ என, ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், இவர் சிறிது வளர்ந்த பின், திரைப்படம் பார்க்க ஆரம்பித்திருக்கின்றார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள்.

இயக்குனர் பாலச்சந்தரின் படங்களைப் பார்த்து அவரது ரசிகருமானார்.
இவர் தனது பாடசாலை படிப்பினை சென்னையில முடித்து விட்டு தனது இளங்கலைப் பட்டத்தினை சென்னையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகப் பிரிவில் படித்தார். தொடர்ந்து மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் கற்றார். 1977இல் இவர் முதுகலைப் பட்டம் முடித்து சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.

1988இல் மணிரத்னம் திரைப்பட நடிகை சுஹாசினியை கரம்பற்றினார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.

திரையுலகில் மணிரத்னத்தின் அறிமுகம்:-

இயக்குனர் மணிரத்னத்தின் மாமா, அண்ணன், தம்பி என அனைவரும் திரையுலகில் விநியோகஸ்தர்;, தயாரிப்பாளர் என பணியாற்றியுள்ளனர். இவர் திரையுலக குடும்பத்தில் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றாமலே இயக்குனராக அறிமுகமானவர்.

இவர் 1983ஆம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். அதனையடுத்து பம்பாய், திருடா திருடா என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்தார்.

ரோஜா திரைப்படத் இவரது இயக்கத்தில் நடிகர் அரவிந்தசாமியின் நடிப்பில் 1992ஆம் வெளிவந்து உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்திற்காக இவருக்கு பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்திலேயே இவர் இசைப்புயல் என இன்று புகழப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை திரையுலகிற்குள் அறிமுகப்படுத்தினார். இவர் தன் ஆரம்ப திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா திரைப்படத்தில் ஆரம்பித்து இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையில் தனது திரைப்படங்ளை வெளியிட்டு வருகின்றமை யாமறிந்ததே.

இயக்குனர் மணிரத்னத்தின் வாழ்க்கை வரலாறு:-

காதல் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே மலர்ந்தது தான் காதல். காதலை எழுத்துக்கள் கொண்டு எழுத முடியாது. அடுத்தவர்களிடம்; அதனை சொல்லி விளக்க வைக்க முடியாது. மாறாக உரியவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய ஒன்று. அத்தகைய காதலை. அனைவருக்கும் புரியும் வகையில் திரைப்படமாக எடுக்கும் திறன் கொண்டவர் இயக்குநர் மணிரத்னம்.

திரையுலகிற்கு இவர் பல திறமை வாய்ந்த கலைஞர்களைப் அறிமுகமாக்கியுள்ளார். இவரின் படைப்புகள் அனைவராலும் பெரிதும் பேசப்படுவது இவரது வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைப்படத்தின் உரையாடல் தன்மை அதாவது வசனங்களின் இரத்தினச் சுருக்கமாக இருக்கும். இவர் திரைப்படங்கள் பல உண்மை கதைகளை தழுவி எடுப்பதோடு அற்புதமாக திரைக்கதை அமைத்து இயற்றுவதில் மணிரத்னம் மிக்க வல்லவர்.

இயக்குனர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் 1980களின் பிற்பகுதியில் தமிழ் திரையுலகில் மணிரத்னம் அவர்களும் தனது தத்ரூபமான மாறுபட்ட கதையம்சம் கொண்ட காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவரது தனிப்பட்ட விருப்பமாகும்.

மணிரத்னம் நேரடியாக யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் அவரது இயக்கத்தில் 1986ஆம் ஆண்டு வெளிவந்த ஐந்தாவதாக மௌன ராகம் பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை இத்திரைப்படத்தின் பின்னர் பெற்றார். அடுத்து 1986ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் நடிகர் கமலின் நடிப்பில் வெளிவந் நாயகன் திரைப்படமும் பெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து இவரது இயக்கிய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன. மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை மணிரத்னம் சொந்தமாக நடத்தி வருகிறார்.

மணிரத்னத்தின் திரைப்படங்கள்:-

 • 1983 ஆம் ஆண்டு பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
 • 1984 ஆம் ஆண்டு உணரு (மலையாளம்)
 • 1985 ஆம் ஆண்டு இதய கோவில்
 • 1985 ஆம் ஆண்டு பகல் நிலவு
 • 1986 ஆம் ஆண்டு நவரச நாயகன் காத்திக், மோகன் ரேவதி நடிப்பில் வெளியான மௌன ராகம் இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு காதல் படம், இது மிகப்பெரிய வெற்றி கண்டது.
 • 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் தென்னிந்தியத் திரையுலகில் இன்றும் அதிரடி திரைபடமென்று பேசப்படும் ஒரு திரைப்படம். இத்திரைப்படத்தை போன்று இனி மணிரத்னத்தால் கூட எடுக்க இயலாது என்றுதான் சொல்லவேண்டும்.
 • 1988ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம்
 • 1989ஆம் ஆண்டு கீதாஞ்சலி (தெலுங்கு) இத்திரைப்படம் தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
 • 1990 ஆம் ஆண்டு – அஞ்சலி இத்திரைப்படம் பல குழந்தை நட்சத்திரங்களின் முன்னணி நடிப்பில் உருவான அழகான திரைப்படம் . இதில் ரகுவரன் மற்றும் ரேவதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் குழந்தைகளுக்கான படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பினை பெற்று பெரிய அளவில் பிரபலமான திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படம் பல விருதுகளையும் வென்று தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளது. அஞ்சலி திரைப்படத்தை நகைச்சுவையாக விமர்சித்து தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை காட்சிகள் மற்றும் வசனங்கள் உண்டு
 • 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி இத்திரைப்படம் இந்தியாவின் பிரமாண்ட காவியமான மஹாபாரதம் என்னும் நூலில் உள்ள கர்ணன் – துரியோதனன் என்ற இந்த இரு கதாபாத்திரத்தின் நடிப்பினை மையக்கருவாக கொண்டு உருவானதாகும். இப்படத்தில் கர்ணன் கதாபாத்திரமாக ரஜினியும், துரியோதனன் கதாபாத்திரமாக மம்முட்டியும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். மிகவும் யதார்த்தமான கதையாக இருப்பினும் நடிப்பு மற்றும் அழுத்தமான வசனங்கள் என இப்படத்தினை பெரிய அளவில் வெற்றி பெற வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இன்றும் ரஜினியின் திரைவாழ்வில் உள்ள ஒரு முக்கிய திரைப்படமாகும். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.
 • 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது).
 • 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திருடா திருடா
 • 1995 ஆம் ஆண்டு வெளிவந்த பம்பாய் – இத்திரைப்படம் மனிதன் மதம், மொழி;, இனம் இவற்றால் வேறுப்பட்டாலும் கடைசியில்; மனிதநேயமே சிறந்தது என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு திரைப்படமாகும்.
 • 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இருவர் இத்திரைப்படம்; மறைந்த நடிகர் மற்றும் முதல்வர் எம்.ஜி ராமசந்திரன் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் மு. கருணாநிதி ஆகிய இருவரதும்; வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
 • 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தில் சே (இந்தி) இத்திரைப்படம் தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
 • 2000 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட அலைபாயுதே , காதல் படங்கள் என்று சொன்னால் நினைவிற்கு வரும் படங்களில் ஒன்று. ஆரம்பத்தில் காதல் இருப்பது போல் இராது. காதல் மரம் போன்றது அதை சண்டை எனும் இயற்கை சீற்றம் பாதிப்பு ஏற்படுத்தினாலும் அதன் வேர் இருவர் மனதிலும் ஆழமாக இருந்தால் அவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அழகாக கூறியுள்ளார்.
 • 2002 ஆம் ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால்
 • 2004 ஆம் ஆண்டு ஆய்த எழுத்து – ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் வெவ்வேறு நடிகர்களை வைத்து, திரைப்படமாக்கப்பட்டன.
 • 2007 குரு (ஹந்தி ) – தமிழிலும் இப்பெயரிலேயே மொழிமாற்றப்பட்டு வெளியானது.
 • 2010 ஆம் ஆண்டு ராவண் என்ற பெயரில் ராவணன் திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். தமிழிலும் , இந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.
 • 2013 ஆம் ஆண்டு கடல்
 • 2015 ஆம் ஆண்டு ஓ காதல் கண்மணி , காலம் மாறலாம்;, நாம்; மாறலாம், நடைமுறை மாறலாம். ஆனால் நம் பராம்பரியத்தில் காதல் திருமணத்தில் முடிவதே என்பதை நிலைநிறுத்தி உள்ள திரைப்படமாகும்.
 • 2017 ஆம் ஆண்டு காற்று வெளியிடை
 • 2018 ஆம் ஆண்டு செக்கச்சிவந்த வானம் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அதாவது அரவிந்த் சாமி, சிலம்பரசன், பிரகாஷ் ராஜ்,அருண் விஜய், விஜய் சேதுபதி என தமிழ் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி ; திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் எனப்படும் பின்னணி இசை இப்படத்திற்கு பலமாக அமைந்து இப்படத்தினை பிரபலமாக்கியது. இவற்றையெல்லாம் தாண்டி இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில அதிரடி காட்சிகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது.

 

இவற்றிற்கெல்லாம் மேலாக மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஜெயம்ரவி, உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன்  திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டது. ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *