tamil-cinema-trend-setter-dhanush-trending-captainmiller

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டர்ஆக விளங்கிய தனுஷ்

தனுஷ்:-

தமிழ் சினிமாவில் மிக சாதாரணமாக தன் பயணத்தை ஆரம்பித்து இன்று அதி உச்சத்தை தொட்டவர்களில் நடிகர் தனுஷூம் ஒருவர். திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறியப்படும் இவரின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்பதாகும். இவர் நடிகனாக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்; மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி தமிழ் , ஹிந்தி மற்றும் ஆங்கில சினிமா என புகழ் பெற்றுள்ளார்

தமிழ்திரையுலகில் நடிகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலங்காலமாக வகுத்து வைத்திருந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, பாலிவுட் சென்று அங்கும் வெற்றியடைந்து, தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தனுஷ் உலக சினிமா வரலாற்றில் சிறு வயதிலேயே மிக பிரபல்யம் அடைந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை ஆதரித்த கதாநாயகர்கள் எப்படி இருப்பார்கள் என பார்த்தால், பெரும்பாலும் அவர்கள் பொதுவாக நம் தமிழ் சினிமாவில் வரும் எல்லா ஹீரோக்களும் எதிர்பார்ப்பு ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமி மாதிரி சாக்லேட் பாய் போல இருக்கவேண்டும் அப்படி இல்லையென்றான் கம்பீரமாகக் கட்டுமஸ்தான உடல் வாகை கொண்டவர்களாக இருப்பார்கள். இவை இரண்டும் இல்லாமல் மெல்லிய உடம்பு சாதுவான முகம் பக்கத்து வீட்டு பய்யன் போல் இருக்கும் இவர் தமிழ் சினிமாவுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று கூறலாம் தனுஷ்.

சினிமா நடிக்க வாய்ப்பு தேடும் சாதாரண இளைஞர்களை போல, சாலிகிராமத்தின் ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் புகைப்படம் கொடுத்து விட்டு, ஆடிஷன் அட்டெண்ட் செய்த அனுபவம் எதுவும் இல்லை. ஆனால், தனுஷின் உடல் வாகுக்காக வெகு மோசமான விமர்சனங்களையும், படப்பிடிப்புத் தளத்தில் பலரது கேலிகளுக்கும் முகங் கொடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் மெல்ல, தனது பலம், பலவீனங்களை கண்டறிந்து தன்னைச் செதுக்கிக் கொண்ட நடிகர் தான் தனுஷ்.

தனுஷின் ஆரம்பகால வாழ்க்கை:-

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி, தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக நடிகர் தனுஷ் பிறந்தார். அவர், தனது பாடசாலைப் படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜோன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பாடசாலையில் ஆரம்பித்தார். இவர் தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்தவேளை இவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் இவரை சினிமாவில் நடிக்க கேட்டதற்கிணங்க தனது கல்வியை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

தனுஷின் இல்லற வாழ்க்கை:-

2004ஆம் ஆண்டில் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷின் திரைப்பட வாழ்க்கை:-

செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வணிக ரீதியில் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனையடுத்து தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.

இதன் மூலமாக தனுஷ் தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் சினிமாவில் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கின்றார். சினிமாவில் ஜெயிக்க முக வெட்டு , உடல் வாகு இவற்றுக்கெல்லாம் அப்பால் அர்ப்பபணிப்புடன் செய்யும் வேலையை நேசித்து திரையில் தோன்றினால், பிராந்திய, தேசிய, சர்வதேச எல்லைகளையெல்லாம் தாண்டி ரசிகனின் மனதை வெல்லலாம் என்பதே.அதை தன் நடிப்பின் மூலம் இன்று நிரூபித்தும் இருக்கின்றார் என்றால் அது மிகையாகாது. ”காதல் கொண்டேன்”;, அதாவது செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில சமூகத்தில் குழந்தைப்பருவத்தில் மிக கசப்பான அனுபவங்களைக் கொண்ட, அனைவரையும் போல, மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ ஏங்கும் இளைஞனாக நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரையும் வியக்க வைத்தது.

இதையடுத்து இயக்குநர் சுப்ரமணிய சிவாவின் ”திருடா திருடி” திரைப்படத்தில் வேலையில்லாமல், 24 மணி நேரமும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் சாதாரண இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மன்மத ராசா” திரைப்பாடல் தான் தனுஷை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது எனலாம். அப்பாடலில் அவரது துடிதுடிப்பான இளமையும் அவருடைய நடனமாடும் திறனும் தான் அவரைப் பற்றி பலரையும் பேச வைத்தது.

தனுஷ் எப்போதுமே கதையை தேர்வு செய்யும் போது மிகவும் அழுத்தமான கதைக்களங்களை தேர்வு செய்யும் அதே நேரம், சாதாரணமான மசாலா படங்களிலும் நடிப்பார். அதனடிப்படையில் தான் அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டார். அந்த வரிசையில் ”தேவதையைக் கண்டேன்”, ”சுள்ளான்”,”புதுப்பேட்டை”, ”அது ஒரு கனா காலம்”, பொல்லாதவன்”, “திருவிளையாடல் ஆரம்பம்”,”யாரடி நீ மோகினி”, ”படிக்காதவன்”, ”ஆடுகளம்”, ”வேலையில்லாப் பட்டதாரி”, ”அசுரன்” ,”வேங்கை”, “மயக்கம் என்ன”, என அவரது திரையுலக பணத்தில் சரி சமமான முக்கியத்துவம் கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசமாக்கினார்.

விசில் பறக்க வைத்த தனுஷின் நடிப்பு:-

தனுஷின் நடிப்பில் வெளிவந்த ”மயக்கம் என்ன” எனும் திரைப்படத்தில கதாநாயகியிடம் நமக்கு பிடிச்ச வேலையை செய்யணும் இல்லன்னா செத்திடணும் என வசனம் பேசும் இடத்திலும், இன்னொரு திரைப்படமான “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் தனது தாயின் உடலை உயிரற்று பார்க்கும்; தருணத்தில் அப்படியே உறைந்து அவர் அதே இடத்தில் அமர்ந்து அழும் உணர்வினை வெளிப்படுத்தும் காட்சியிலும், மற்றும் அவரது ”ஆடுகளம்” திரைப்படத்தில் காதல் உணர்வினை மிக்க மகிழ்ச்சியாக லுங்கியைப் பிடித்து ஆடிக் கொண்டு பாடும்போதும், ரசிகர்கள் தியட்டரில் விசில் பறக்க தனுஷூன் நடிப்புக்காக மட்டுமே ஆர்ப்பரித்தனர்.

ட்ரெண்ட் செட்டர்ஆக விளங்கிய தனுஷ்:-

தனுஷை ரசிகர்கள் ஒரு கதாநாயகனை சும்மா மாஸான கதாபாத்திரத்திலும் ஏற்றுக் கொள்கிறார்கள், சும்மா சாதாரணமாக பக்கத்துவீட்டு பையன் கதாபாத்திரத்திலும் சரிசமாக ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றும் அவரது இன்னொரு திரைப்படமான “மரியான்” இல் இவர் மீனவன் கதாபாத்திரத்திலும், “பொல்லாதவன்” திரைப்படத்தில் சாதாரண சண்டைக் காட்சிக்கு சிக்ஸ் பக் வைத்ததும், அனைத்திற்கும் மேலாக “அசுரன்” திரைப்படத்தில் 50 வயது தோற்றத்திலும் தோன்றி இயக்ககுநர்களின் கதாநாயகன் என்றால் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு, குறிப்பிட்ட உடல்வாகு கொண்டவர்கள் தான் பொருந்துவார்கள் என்ற காலங்காலமாக வகுத்து வைத்திருந்த மரபுகளை முற்றிலுமாக தகர்த்தெறிந்தார். இதனையடுத்து அவரின் நடிப்பில் வரிசையாக வெளிவந்த “வடசென்னை”, ”ஜகமே தந்திரம்”, “கர்ணன்”,”பட்டாசு”, “திருச்சிற்றம்பலம்” எனக் கலவையான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

பாலிவுட்டில் மற்றும் ஹோலிவுட்டில்
வெற்றிக்கொடி நாட்டிய தனுஷ்:-

தனுஷ் தனது நடிப்பாற்றலால் இந்தியாவில் தமிழ் சினிமாவில் மட்டுமன்றி ”ஷமிதாப்” , ராஞ்சனா” உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து “அத்ராங்கி ரே” திரைப்படத்தில் விமர்சகர்களிடம் நல்ல தரமான நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார். ராஞ்சனாவில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார்.

வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து அமோக வெற்றிபெற்றது. அதுமட்டுமன்றி சர்வதேச திரைப்படமான “தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்”; என்ற தோன்றி உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து பிராந்திய மொழி எல்லைகளை மட்டுமல்லாமல், இந்திய சினிமாவையும் தாண்டி, “தி கிரே மேன்” என்ற ஹொலிவுட் திரைப்படத்திலும் நடித்து தமிழ் சினிமா நடிகர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார்.

நடிகர் தனுஷ் நடித்த ஆங்கிலப்படமான, “தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்”; என்ற ஆங்கில படம் பிரஞ்சு மொழியில் தயாரான இந்தப்படத்தை கென் ஸ்காட் இயக்கி இருந்தார். தனுஷடன் இணைந்து பெர்னிக் போஜோ, எரின் மானிட்டரி, பர்கத் அப்டி உள்பட பலர் நடித்திருந்தார்கள், வின்செண்ட் மத்தியாஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார், அமித் திரிவேதி , நிக்கோலஸ் எரரா இசையமைத்திருந்தார். 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது.

இந்தியாவின் மும்பையில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த பக்ரி இவர் மேஜிக் நிபுணர். சிறு சிறு மேஜிக் செய்து எல்லோரையும் கவரக்கூடியவர். ஒரு நாள் அவன் தாய் அவனது தந்தை வெளிநாட்டில் இருப்பதாக கூறிவிட்டு இறந்து விடுகிறார். தன் தந்தையை தேடி பாரீஸ் செல்லும் பக்ரி பாரீஸிலிருந்து இங்கிலாந்து என சுற்றுகிற கதை. பக்ரியின் பயணத்தின் போது அவன் சந்திக்கின்ற நபர்கள், மேலும் அவனுக்கு வரும் காதல் என ஜாலியாக, நகைச்சுவையாக செல்லும் கதை இத்திரைப்படம் நகர்கிறது.

ஒரு நடிகனாக அனைத்து இலக்கணங்களையும் தகர்த்தெறிந்து, கலைஞனாக தான் ஆரம்பித்த அனைத்து கலைகளிலும் சொல்லி அடித்து வெற்றியை தன் வசமாக்கினார் தனுஷ். பாடகர் மற்றும் பாடலாசிரியராக தமிழ் சினிமாவுக்குப் வெற்றிப் பாடல்களைத் தந்தவர். குறிப்பாக தனுஷ் இயக்கத்தில் வெளியான மூன்று என்ற படத்தில் வரும் “Why This Kolaveri Di” பாடல் உலகமெங்கும் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் அவர், ‘ஓட ஓட’ ‘பிறைத் தேடும் இரவிலே’, மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பெற, 2012இல் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படமான ‘3’ படத்திற்கான அனைத்து பாடல்களையும் எழுதினார். இதைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு ‘எதிர் நீச்சல்’ படத்தில் ‘பூமி என்னை சுத்துதே’ ‘நிஜமெல்லாம்’, மற்றும 2013ஆம்; ஆண்டு ‘மரியான்’ படத்தில் ‘கடல் ராசா நான்’ போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

தனுஷின் தயாரிப்பில்காக்கா முட்டை”, “விசாரணை” உள்ளிட்ட வித்தியாசமான கதை களங்களைக் கொண்ட திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அப்படங்களுக்காகவும் பல சர்வதேச விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்தார். இயக்குநராக ”பா. பாண்டி” திரைப்படம் ஒரு முதிர்ச்சியான இயக்குநராகவும் அடையாளப்படுத்தியது.

தனுஷின் விருதுகள்:-

  • 2008 ஆம் ஆண்டு ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு இந்திய தேசிய விருதுதை ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்காக வென்றார்.
  • 2011 ஆம் ஆண்டு ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் பிலிம்ஃபேர் விருது’ பெற்றார்.
  • 2011 ஆம் ஆண்டு ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகப் பெற்றார்.
  • 2012 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதை ‘3’ படத்திற்காக தட்டடிச்சென்றார்.
  • 2012 ஆம் ஆண்டு ‘3’ படத்தில் இடம்பெற்ற அவர் எழுதிப் பாடிய பாடலான ‘வை திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் மிகச் சிறந்த பாடலாகத் தேர்வு செய்யப்பட்டது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *