பிக்பாஸ் சீசன் 7:-
ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு விதமான ரசிகர்கள் உள்ளன. அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க ஒரு தனி ரசிகர்கள் இருக்கின்றன. அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு ஆரம்பமான நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக 6 சீசன்கள் முடிவடைந்து தற்போது 7வது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. வழக்கம் போலவே இதன் ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலே ஏழாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் மற்றும குக் வித் கோமாளி என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் ஒரே வீட்டில எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்து கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டுப்போட்டுவிடும் இந்நிகழ்ச்சி, தனது 7வது சீசனிலும் பல்வேறு புதிய அப்டேடுடன் களமிறங்கி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, பிக்பொஸ் ரசிகர்கள், கண்டண்டுக்காக காத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள், யுடியூப், பேஸ்புக் வைத்திருப்பவர்கள், என அதிகமானோர் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதற்கேற்றார் இம்முறை அதிகப்படியான போட்டியாளர்கள், இரண்டு பிக்பாஸ் வீடுகள் என புதுபுது விஷயங்களோடு களமிறங்கி இந்த முறையும் அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த 7-வது சீசனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய சீசன்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 100 கோடிக்கும் அதிகமாக கமல் சம்பளம் பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள்:-
9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த 7வது சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள்? என கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
Bigg Boss Season 7 Contestant List:-
நடிகை ரவீனா:-
ரவீனா தாஹா சன் டிவியில் தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். ஜீ தமிழ் டிவியில் 2017 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை முதல் ராட்சசன், எனிமி படம் வரை இவரது சிறுசிறு கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட பெயரை பெற்றுத்தந்தன. இதன் பின்பு இவர் நடிப்பில் விஜய் டீவியில் வெற்றிகரமான சீரியலான மௌன ராகம் 2 தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு:-
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலின் மூலமாக அறிமுகமான விஷ்ணு, அந்த சீரியலில் நடித்ததக் மூலம் பெரிய அடையாளத்தை பெற்றார். இத்தொடருக்கு பின் பல பெண் ரசிகைகள் அவருக்கு ரசிகைகளாகினர். பின்னர் சில காலங்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த இவர் நடிகர் விமல் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவான மாப்ள சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.இதனையடுத்து இவர் நடிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சத்யா சீரியலில் இவரது நடிப்புக்கும், இச் சீரியலில் இவருடன் ஜோடியாக நடித்துவரும் ஆயிஷாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரிக்குமே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இலக்கியவாதி பவா செல்லத்துரை:-
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எவ்விதமான போட்டியாளர்கள் வருவார்கள் என்றே தெரியாத அளவிற்கு புதிய துறையை சேர்ந்தவர்களை கூட விஷேடமாக அழைக்கப்படுவார்கள். அந்தவகைளில் திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், நடன இயக்குனர்கள், கவிஞர்கள், இசைத் துறையை சேர்ந்தவர்கள் என பலதுறையினர் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இம்முறை தமிழ் சிறுகதை எழுத்தாளர், பேச்சாளார், மொழிப்பெயர்ப்பாளார் மற்றும் பதிப்பாசிரியர் என்று பன்முகத்திறமை கொண்டவரான பவா செல்லத்துரை இடம்பெற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பன்முகத்திறமை கொண்ட இலக்கியவாதி செல்வது இதுவே முதன்முறையாகும்.
மாயா கிருஷ்ணன்:-
வேலைக்காரன், மகளிர் மட்டும், 2.0 உட்பட பல திரைப்படங்களில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு, நடிகர் கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிறகு தான் பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரம் படத்தின் ஒரு பிஜிஎம் மூலம் ஹிட்டடித்த இவர் விஜயின் ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்டேண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவர். இவர் பிக் பாஸில் என்னென்ன மாயங்கள் செய்யவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாடகர் யுகேந்திரன்:-
மகனான யுகேந்திரன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனாவார். இவர பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். விஜயுடன் யூத் படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீப காலமான தமிழ் சினிமா, தமிழ்நாடு என அனைத்திலிருந்தும் ஒதுங்கி நியூசிலாந்தில் செட்டிலானார். தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார்.
பிரதீப் அந்தோனி:-
பிரதீப் அந்தோனி அருவி திரைப்படத்தின் துணை இயக்குநர் என்ற அறிமுகத்தோடு, இந்த இயக்குநரின் இரண்டாவது படமான வாழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கவினின் நெருங்கிய நண்பர் ஆவார். பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக்கை கமல்ஹாசன பரிசாக கொடுத்தார்.
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா:-
பழம்பெருநடிகரான நடிகர் விஜயகுமாரின் பேத்தினான ஜோவிகா பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.இவர் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் என்பது நமக்கு தெரிந்தவை தான்.
டான்சர் மணிசந்திரா:-
டான்ஸ் மாஸ்டரான மணிசந்திரா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர். இவர் பல தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் நிலையில் இவரும் இந்த பிக்பாஸ் 7 சீசனில் களமிறங்கியுள்ளார்.
ஐஷு டான்சர்:-
திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் டான்சரான ஐஷ_ பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அதற்கான தளமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் களம்காண்கிறார். இவருக்கு பரிசு பெட்டியிலிருந்து யு என்ற எழுத்து பொறித்த ஜாக்கெட் பரிசாக கிடைக்கிறது.
கூல் சுரேஷ்:-
இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் போட்டியாளர் கூல் சுரேஷ்தான். இவர் எப்போதுமே மக்களை கவரக்கூடிய மனிதர், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூர்ணிமா ரவி:-
பிரபல யூடியூப்பரான பூர்ணிமா ரவி 7வது போட்டியாளராக பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் களம் கண்டுள்ளார். இவருக்கு கமல்ஹாசன் விசிலை பரிசாகக் கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
வினுஷா தேவி:-
விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார். கறுப்பு வைரத்தை கமல் பரிசாக கொடுத்தார்.
அக்ஷயா உதயகுமார்:-
அக்ஷயா உதயகுமார லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்து பிரபலமானவர். கேரளாவை சேர்ந்தவரான இவர் மலையாளத்தில் சித்தி என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தவர். கேரளாவில் பிறந்தாலும் தான் இலகுவாக தமிழ் பேச காரணமே விஜய் படங்கள்தான் என்று சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
சரவண விக்ரம்:-
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்த சரவண விக்ரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். சரவணனனுக்காக பிக் பாஸ் மேடையில் குமரன் மற்றும் தீபிகா கலந்து கொண்டிருந்தனர். கடலைமிட்டாயை அவர்கள் கையில் பரிசாக கொண்டு வந்திருந்தனர்.
விசித்ரா:-
விஜய்தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதி வரை முன்னேறி அசத்திய விசித்ராவும் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ளார். இவருக்கான பரிசு பெட்டியில் சைக்காலஜி டாக்டரேட் முடித்த இவரது சர்டிபிகேட் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்
விஜய் வர்மா:-
விஜய் வர்மா இவர் மொடலிங் துறையில் பணியாற்றியவர். இவர் இம்முறை பிக்பாஷ் 7 போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது திரையுலகிற்கு நுழைய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவர் களத்தில் இறங்கியுள்ளார்.
அனன்யா ராவ்:-
பரதநாட்டிய கலைஞரும் மாடலிங் துறையை சார்ந்தவருமான அனன்யா ராவ். “நான் யார் என்றும் என் திறமை என்ன? என்பது பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருக்கிறேன்” என அனன்யா ராவ் தெரிவித்துள்ளார்.
நிக்சன்:-
பிக் பாஸிற்கு போட்டியாளராக நிக்சன் என்கிற சுயாதீன இசை கலைஞர் வந்துள்ள நிலையில், கமல்ஹாசன் இவருக்கு கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
வைல்ட் கார்ட் மூலம் 2 பேர் நுழைய வாய்ப்பு:-
கடந்த முறை பங்கேற்ற போட்டியாளர்கள், ரசிகர்களை கவரும் வண்ணம் தினந்தோறும் பல்வேறு டாஸ்குகளை செய்து பிக்பாஸ் வீட்டை களைகட்டினர். பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சீசனில் போட்டி பலமாக இருந்த நிலையில், இந்த சீசனிலும் ஒருவருக்கொருவர் டப் கொடுக்கும் வகையில் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கலாம்.