sp-balasubramaniam-spb-tamil-telungu-hindi-kannadam-trending-playbacksinger-legend

எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்தாலும் அவர் குரல் நம் மனதை விட்டு மறையாது

எஸ்.பி.பாலசுப்ரமணியம் :-

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் , நடிகரும் ஆவார். இவரின் இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்பதாகும். இவர் உலகெங்கும் எஸ்.பி.பி.என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் தமிழ், இந்தி , தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் 1966 களில்; பாட ஆரம்பித்து 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். மேலும் இவர் “பாடும் நிலா பாலு” என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் பல திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் அளித்துள்ளார். 2001 ஆம் ஆண்டில இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதும், 2011 இல் பத்மபூஷன் விருதையும் வழங்கியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறப்பு:-

“பாடும் நிலா” ஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நெல்லூரில் எஸ்.பி. சம்பமூர்த்தி – சகுந்தலாமா என்பவர்களுக்கு மகனாக பிறந்துள்ளார். எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிகாதா கலைஞராக இருந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாடகர் எஸ்.பி.சைலாஜா உட்பட ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
இவர் தனது சிறு வயதிலிருந்தே இசையின் மீது மிகுந்த ஆர்வமுள்ளவராக காணப்பட்டார். இதன் விளைவாக இவர் இசை சம்மந்தமாக பல குறியீடுகளைப் குறித்து இசையைக் கற்றுக்கொண்டார். அனந்தபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்துடன் சேர்ந்த இவர், குடற்காய்ச்சல் காரணமாக தனது படிப்பை நிறுத்திவிட்டு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்களின் இணை உறுப்பினராக சேர்ந்தார்.

எஸ்.பி.பி திரையுலக பயணம்:-

இவர் தனது பொறியியல் படிப்பின் போது பல இசை சம்மந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதன் மூலம் பாடல் போட்டிகளில் பங்குபெற்று பல விருதுகளை வென்றார். மெட்ராஸை தளமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசை போட்டியில் 1964 ஆம் ஆண்டில், முதல் பரிசை வென்றார். அனிருட்டா (ஹார்மோனியத்தில்), பாஸ்கர் (தாளத்தில்), இளையராஜா (கிதார் மற்றும் பின்னர் ஹார்மோனியம்), மற்றும் கங்கை அமரன் (கிதாரில்) ஆகியோரைக் கொண்ட ஒரு ஒளி இசை குழுவின் தலைவராக இருந்துள்ளார் பாலசுப்ரமணியம். கந்தசலா , எஸ்.பி. கோடண்டபாணி ஆகியோரால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு பாடல் போட்டியில் அவர் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். “நிலவே என்னிடம் நேருங்காதே” என்ற பாடலே இவரது முதல் ஆடிஷன் பாடலாகும்.

தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1960களின் பிற்பகுதியில் இருந்து ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக இருந்தார். இவர் “சாந்தி நிலையம்” படத்தில் வரும் ‘இயற்கையெனும் இளையகன்னி‘ எனும் தமிழ் பாடல் தான் இவர் முதலில் பாடிய பாடலாகும். ஆனால் அந்தப்பாடல்; வெளிவரு முன்பே எம்.ஜி.ஆர் நடித்தஅடிமைப் பெண்” திரைப்படத்தில் பாடிய ‘ஆயிரம் நிலவே வா‘ பாடல் வெளிவந்தது.

எஸ்.பி.பி  திரையுலக அனுபவம்:-

1980 ஆம் ஆண்டு “சங்கராபரணம்” என்ற திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பலரின் கவனத்தைபெற்றார். இத்திரைப்படம் தெலுங்கு திரையுலகில் இருந்து வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்திரைப்படத்தை கே.விஸ்வநாத் இயக்கிய நிலையில் இதன் ஒலிப்பதிவு கே.வி. மகாதேவன், இத்திரைப்டத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கர்நாடக இசையின் பயன்பாடு அதிகரிக்க வழிவகுத்தது. இவர் கிளாசிக்கல் பயிற்சி பெற்ற பாடகர் அல்ல, ஆனால் தனது பாடல்களைப் பதிவு செய்வதில் “திரைப்பட இசை” அழகியலைப் பயன்படுத்தினார். மேலும் இவர் தனது படைப்புகளுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். 1981ஆம் ஆண்டில் ஹிந்தி படங்களில் அவரது முதல் படைப்பான “ஏக் துஜே கே லியே” விற்காக அவர் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான மற்றொரு தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

எஸ்.பி.பியும் இசை ஜாம்பவான்களும்:-

இவர் 1990களில் இசையமைப்பாளர்கள் தேவா, எம்.எம்.கீரவாணி , எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான “ரோஜா” படத்தில் பாலசுப்ரமணியம் மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். இதனையடுத்து ரகுமானின் இசையில் இவர் தொடர்ந்து பாடல்களை பாடினார். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், ஹம்சலேகா என தமிழ் சினிமா முன்னனி இசையமைப்பாளர் இசையமைத்த பல மெலோடி பாடல்களில் பாடியுள்ள இவர், பெரும்பாலும் ரஜனிகாந்த்தின் திரைப்படங்களுக்கான அறிமுக பாடல்களை இவர் பாடியுள்ளார். இவருக்கு தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி , கன்னடம் என பல மொழிகளில் பல ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடகி அனுபமாவோடு இணைந்து “புதிய முகம் ” திரைப்படத்தில் “ஜூலை மாதம் வந்தால்” பாடலை பாடினார். “கிழக்குச் சீமையிலே” திரைப்படத்தில் இடமட்பெற்ற “மானூத்து மந்தையில மாங்குட்டி” பாடலை நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். 1996ஆம் ஆண்டில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலை மின்சார கனவு படத்தில் பாடியதன் மூலம் இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

பாலசுப்பிரமணியம் கன்னட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். அம்சலேகாவின் “பருவ காலம் ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதன் பின்னர் இவரது இசையில் நிறையப் பாடல்களை பாடினார். ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. 1995ஆம் ஆண்டில் “கனயோகி பஞ்சக்சரி காவாயி ” என்ற திரைப்படத்தில் “உமண்டு குமண்டு” என்ற பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் இந்துஸ்தானி இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.

எஸ்.பி. பியின் பின்னணி குரலும்:-

கமல்ஹாசன் தமிழில் நடித்த “மன்மத லீலை” என்ற திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, இவர் கமலுக்காக பின்னணிக் குரல் கொடுத்தார். தொடர்ந்து கமல்ஹாசனுக்காக 120 தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ரஜனிகாந்த், சல்மான்கான், விஷ்ணுவர்தன், அனில் கபூர், பாக்யராஜ், மோகன், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜூன், ரகுவரன் நாகேஷ், கார்த்திக் ஆகியோருக்கும் பல்வேறு மொழிப் படங்களில் இவர் குரல் கொடுத்துள்ளார். தசாவதாரம் தெலுங்கு படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்களில் ஏழு பாத்திரங்களுக்கு (பெண் கதாபாத்திரம் உட்பட) பின்னணிக் குரல் கொடுத்து சாதனை புரிந்தார். அன்னமய்யா, ஸ்ரீசாயி மகிமா ஆகிய திரைப்படங்களுக்காக இவருக்கு சிறந்த பின்னணிக் குரலுக்காக நந்தி விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் “ஸ்ரீ ராம ராஜ்யம் “தமிழ்த் திரைப்படத்துக்காக் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்காக குரல் கொடுத்தார். “காந்தி” என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பென் கிங்ஸ்லிக்காக குரல் கொடுத்தார்.

எஸ்.பி.பி  அங்கீகாரம்:-

  • கின்னஸ் உலக சாதனை நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
  • சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார்.
  • கர்நாடக இசையில் சங்கராபரணம் என்ற படத்தில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
  • தென்னிந்திய பிலிம்பேர் விருது 7 முறையும், ஹிந்தி பிலிம்பேர் விருது 1 முறையும் பெற்றுள்ளார்
  • நான்கு மொழிகளுகளில் பாடியதற்காக தேசிய விருதினை பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.
  • இவர் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசாங்கத்தின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.

எஸ்.பி. பியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:-

தெலுங்கின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உண்மைநிலை நிகழ்ச்சி படுதா தீயாகாவை இவர் தொகுத்து வழங்கினார். இது இவரது முதல் தொலைக்காட்சி அறிமுகத்தை குறித்தது. உஷா , கௌசல்யா , கோபிகா பூர்ணிமா , ஹேமச்சந்திரா , ஸ்மிதா, மல்லிகார்ஜூ , என்.சி கருண்யா போன்ற தெலுங்கு பாடகர்களின் பாடல் நிகழ்ச்சியில் அறிமுகமானனர். இதனையடுத்து இவர் கன்னடாவின் உண்மைநிலை நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான எட் தும்பி ஹடுவேனுவையும் இவர் தொகுத்து வழங்கினார். எண்டாரோ மகானுபஹ்லுலு, பதலனி உண்டி மற்றும் ஸ்வரபிஷேகம் போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் பாலசுப்பிரமணியம் தோன்றினார். விஜய் தொலைக்காட்சியின் இசைவானில் இளையநிலா எயார்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.

எஸ் பி பியின் நடிப்பு மற்றும் இசையமைப்பு:-

தென்னிந்திய மொழிகளில் பாலசுப்பிரமணியம்; எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

இவர் இந்திய திரையிசையில் மிக கடின உழைப்பால் செழுமையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 1970 களில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். அந்நாட்களில் பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, வாணி ஜெயராம் , எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை இணைந்து பாடியுள்ளார். 1970களின் கடைசியில் தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ்.பி.பி , எஸ்.ஜானகி கூட்டணி; உருவானது.

இவர் 2020 இல் உலகெங்கும் பரவிக்கிடந்த கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் , காவல்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜாவின் இசையில் “பாரத் பூமி” என்ற பாடலைப் பாடி வெளியிட்டார். இந்தப்; பாடலை 2020 மே 30 இல் இளையராஜா தமிழ், இந்தி மொழிகளில் அவரது அதிகாரபூர்வ யூடியூப் கணக்கில் வெளியிட்டார்.

எஸ் பி பியின் இல்லற வாழ்க்கை:-

எஸ்.பி.பாலசுப்ரமணியம் காதலித்துத் திருமணம் செய்தார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகன் எஸ். பி. பி. சரண் , மகள் பல்லவி. இவரின் மகன் சரண் பின்னணி பாடகர மட்டுமன்றி இவர் நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.

நம்மை விட்டு நீங்கா இடம் பிடித்த எஸ் பி பாலசுப்ரமணியம்:-

2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது.
ஆனாலும் திடீரென்று 2020 செப்டம்பர் 24 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல், 2020 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது. இவர் உடல் பிரிந்தாலும் இவரது குரல் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *