சீயான் விக்ரம்:-
தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டு நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல் கால் பதித்தவர் தான் நடிகர் விக்ரம். இவர் அனைவராலும் ‘சீயான் விக்ரம்’ என்று அழைக்கப்படுபவார், இவர் ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல கஸ்டங்களை தாங்கி படிப்பபடியாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தமிழ் மட்டுமன்றி ஹிந்தி தெலுங்கு, மலையாளம், எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
துமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் ஒரு நடிகராகத் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகர், டப்பிங் கலைஞர், மற்றும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். ஏழை எளிய மக்களின் நலனுக்காகப் பல பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வரும் அவர், ‘வித்யா சுதா’ மற்றும் ‘சஞ்சீவனி டிரஸட்; ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீயான் விக்ரமின் வாழ்கை மற்றும் திரையுலக அனுபவம்:-
விக்ரமின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், சாதனைகளையும் பற்றி கீழே பார்ப்போம்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் பரமக்குடியில் தந்தை வினோத் ராஜூக்கும், தாய் ராஜேஸ்வரிக்கும் மகனாக 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, பிறந்தார். இவரின் இயற்பெயர் விக்ரம் கென்னெடி என்பதாகும். விக்ரமின் தாயார், ஒரு சப்-கலெக்டர் மட்டுமன்றி புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களின் சகோதரியும் ஆவார். இவரது மகனான நடிகர் பிரசாந்த், விக்ரமின் நெருங்கிய உறவினராவார். இவருக்கு அரவிந்த் , அனிதா என்ற சகோதர, சகோதரியும் உள்ளனர்.
சீயான் விக்ரமின் ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:-
இவர் தனது ஆரம்பகால கல்வியை சேலம் அருகேயுள்ள மலைப்பிரதேசமான ஏற்காட்டிலுள்ள மாண்ட்போர்ட் பள்ளியில், ஆரம்பித்தார். பள்ளியில் கல்வி பயிலும் போதே நீச்சல், கராத்தே போன்ற பல அற்புதக் கலைகளையும் சேர்த்து கற்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர் இவர் சினிமாவில் கால் பதிக்க எண்ணினார். ஏனென்றால், இவருடை தந்தை வினோத் ராஜ் , சினிமாவில் மீது இருந்த மோகத்தால் தனது சொந்த ஊரானப் பரமக்குடியை விட்டு, வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தார். ஆனாலும், அவருக்கு துணைக் கதாபாத்திரம், மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால், அவர் மனமுடைந்து போனார். இதனால் விக்ரம் தான் சினிமாவில் சாதித்து விட வேண்டும் என அவருக்குள் ஒரு வெறி ஏற்பட்டது. தன் தந்தையின் ஆசையை, தான் அடைத்து அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது விருப்பத்திற்கு, அவரது தந்தையே தடையா இருந்தார். தன் வாழ்வில் தான் எதிர்கொண்ட தோல்வியைத் தனது மகன் எதிர்கொள்ளக்கூடாது என நினைத்த அவர், விக்ரமை கல்லூரியில் சேர்த்து விட்டார்.
இதனையடுத்து இவர் 1983ஆம் ஆண்டில சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில், ஆங்கிலத்தில் தனது இளங்கலைப் பட்டத்தை பெற்றார். மீண்டும் தனது தந்தையின் விருப்பத்திற்கிணங்க, லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ சேர்ந்தார். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. கல்லூரிக்குத் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணித்த போது விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதர்காலத்தில் தன் கால் செயலிழந்து விட கூடாது என்பதால், 23 அறுவை சிகிச்சைகளை செய்து மூன்றாண்டுகள் தொடர்ந்து படுக்கையிலே இருந்தார்.
சீயான் விக்ரமின் திரையுலகப் பிரவேசம்:-
இவர் தனது தனது முதுகலை பட்டத்தை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இடையிடையே, சில விளம்பரங்களில் நடித்து வந்தார். இதன் காரணமாக இவரை இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், 1984 ஆம் ஆண்டில் அவரது படமான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இதன் நடுவே ஏற்பட்ட விபத்தினால், அதில் நடிக்க இயலாமல் போனதால் அவ்விபத்தில் இருந்து மீண்டும் வந்தவுடன் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என ஸ்ரீதர் சொன்னதையடுத்து, உடல் நிலை வழமைக்கு வந்தவுடன் அப்படத்தை முடித்துக் கொடுத்தார். அத்திரைப்படம் 1990 ஆம் ஆண்டில் வெளியானது.
சீயான் விக்ரமின் திரையுலக வாழ்க்கை:-
திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு விக்ரம் 1988 இல் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் .தமிழ்த் திரையுலகில் விக்ரமை அறிமுகம் செய்த ஸ்ரீதர் அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பையும் தந்தார். 1991ல் இரண்டாவது படமான் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தவருக்கு, எஸ்.பி.முத்துராமனின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் 1992இல் பி.சி.ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
இதனையடுத்து இவர் இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் மும்முரமாக இருந்த அவர், மீண்டும் தமிழுக்கு 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக வந்தார். இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்த அவர், 1997 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் அவர்களின் தயாரிப்பில் உருவான ‘உல்லாசம்’ என்ற படத்தில், நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர், அவர், 1998இல் ‘கண்களின் வார்த்தைகள்’ , 1999 இல் ‘ஹெளஸ்ஃபுல்’ , ‘சேது’ , 2000இல் ‘சிறகுகள்’ ; ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ , 2001இல் ‘தில்’, ‘காசி’ , 2002இல் ‘ஜெமினி’ , ‘சாமுராய்’ , ‘கிங்’ , 2003இல் ‘காதல் சடுகுடு’ , சாமி’ , ‘பிதாமகன்’ ,2004இல் ‘அருள்’ ,2005இல் ‘அந்நியன்’ , ‘மஜா’ , 2008இல் ‘பீமா’ , 2009இல் ‘கந்தசாமி’ ,2012இல் ‘ராவணன்’, , 2011இல் ‘தெய்வத் திருமகள்’ , ‘ராஜபாட்டை’ ,2012இல் ‘தாண்டவம்’ ,2013இல் ‘டேவிட்’ 2014இல் ‘ஐ’ என்ற திரைப்படத்திலும், 2015இல் ‘10 எண்றதுக்குள்ள’ 2016இல் ‘இருமுகன் ’, 2018இல் ‘ஸ்கெட்ச் ’ ,‘சாமி 2’ 2019இல் ‘கடாரம் கொண்டான் ’ , 2022இல் ‘கோப்ரா’ , ‘மகான் ’ மற்றும் மணிரத்னத்தின் இயத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் (1) என்ற மிகப் பிரமாண்டமான திரைப்படத்திலம் நடித்தார். தொடர்ந்து இந்த ஆண்டான 2023 பொன்னியின் செல்வன் பாகம் (2) திரைப்படம் வெளியானது. கருடா திரைப்படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகின்றது. இவரின் நடிப்பில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் துருவ நடசத்திரம், தங்கலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இவர் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். விக்ரம் நடிக்க ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் திரைப்படத்தின் மூலமே விக்ரம் திரையுலக கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘சேது’.
சீயான் விக்ரமின்பிற மொழித் திரைப்படங்கள்:-
தமிழ்த் திரையுலகில் அறிமுகமானாலும், ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிற மொழிகளில் நடித்த படங்களின் பட்டியல்:
ஹிந்தி – 2010இல் ‘ராவன்’ (2010), 2013இல் ‘டேவிட்’ (2013).
மலையாளம் – 1993இல் ‘துருவம்’ , ‘மாபியா’ , 1994இல் ‘சைன்யம்’ ,1995இல் ‘ஸ்ட்ரீட்’ , 1996இல் ‘மயூர ந்ரிடம்’ , ‘இந்திரப்ரச்தம்’ , ‘ராசபுத்திரன்’ , 1997இல் ‘இது ஒரு சிநேஹகதா’ , 2000இல் ‘ரெட் இந்தியன்ஸ்’ , 2001இல் ‘இந்த்ரியம்’ .
தெலுங்கு –1993இல் ‘சிருன்னவுலா வரமிஸ்தாவா’ , 1994இல் ‘பங்காரு குடும்பம்’, 1995இல் ‘அடால மஜாக்கா’ , 1996இல் ‘அக்கா பாகுன்னாவா’ , 1997இல் ‘குரல்ல ராஜ்ஜியம்’ , 2001இல் ‘9 நேலாலு’ , ‘யூத்’
சீயான் விக்ரமின் பிறப் பணிகள்:-
நடிகை மீனாவுடன் 2000 ஆம் ஆண்டில், இணைந்து ஒரு பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இதில், விக்ரமுடன் நடிகை மீனாவும் இணைந்து பாடியிருப்பர். இதைத் தொடர்ந்து, ‘கந்தசாமி’, ‘ஸ்ரீ’, ‘ஜெமினி’, ‘தெய்வத் திருமகள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘மள்ளனா’, ‘நன்னா’, ‘ராஜபாட்டை’, ‘டேவிட்’ , ‘வீடிந்தே’ஆகிய படங்களில் அவர் ஒரு சில பாடல்களுக்குப் பின்னணிப் பாடியுள்ளார்.
மேலும் இவர் நடிகர் அஜித்குமார் நடித்த ‘அமராவதி’ (1993) படத்தில் அஜித்குமாருக்கும், 1994ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ படத்திற்காக நடிகர் பிரவுதேவாவிற்கும், 1995ஆம் ஆண்டில் வெளியான ‘குருதிப்புனல்’ படத்தில் ஜானுக்கும்,1997ஆம் ஆண்டில் வெளியான ‘மின்சாரக் கனவு’ படத்தில் மீண்டும் பிரவுதேவாவிற்கும் 2000ஆம் ஆண்டு வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்த நடிகர் அப்பாஸிற்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டி‘ரீல் லைஃப் இன்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அந்நிறுவனத்தில் தமிழ், ஹிந்தி மொழிப்படமான ‘டேவிட்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதனிடையே இவர் நடித்து 2008இல் வெளியான ‘மஜா’ படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
சீயான் விக்ரமின் பொது சேவை:-
விக்ரம் சஞ்சீவனி டிரஸ்ட்டின் விளம்பரத் தூதராக இருந்து வருகின்றார், பல்வேறு சமூக நலத் தொண்டுகளை தனது ரசிகர் மன்றம் மூலமாக தொடர்ந்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏழை மக்களுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி,இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி எனப் பல்வேறு வகையான சேவைகளை இவர் செய்து வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த தினத்தன்றும் கண்தான முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.
சீயான் விக்ரமின் இல்லற வாழ்க்கை:-
விக்ரம் கேரளாவைச் சேர்ந்த சைலஜா பாலக்ருஷ்ணன் என்பவரை குருவாயூரில் மணமுடித்தார். இவர்களுக்கு அக்ஷிதா என்ற மகளும், த்ருவ் என்ற மகனும் உள்ளனர்.த்ருவ் சமீபத்தில் திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பித்தக்கது.
சீயான் விக்ரமின் விருதுகள்:-
- 2003இல் ‘பிதாமகன்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருதை’ வென்றார்.
- 2011இல் ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில சிறப்பாக நடித்தமைக்காக, சிறந்த நடிகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ வழங்கப்பட்டது.
- 2011இல ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆப் மிலன்’ அவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டத்தை’ வழங்கி கௌரவித்தது.
- 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருதுகளான ‘சிவாஜி கணேசன் விருதை ‘சேது’ படத்திற்காகவும் 1999ஆம் ஆண்டில் ‘ஸ்பெஷல் ஜூரி விருதையும் மற்றும் ‘பிதாமகன்’ படத்திற்காக ‘சிறந்த நடிகருக்கான விருதை’ 2003 ஆம் ஆண்டிலும் வென்றார்.
- 1999ஆம் ஆண்டில் பிலிம்பேர் விருதுகளை ‘சேது’ திரைப்படத்திகாக ‘ஸ்பெஷல் விருதையும், 2001ஆம் ஆண்டில் ‘காசி’ , 2003ஆம் ஆண்டில் ‘பிதாமகன்’ , ‘சாமி’ , 2005ஆம் ஆண்டு ‘அந்நியன்’ , 2010 ‘ராவணன்’ , 2011இல் ‘தெய்வத் திருமகள்’ திரைப்படங்களுக்காக சிறந்த நடிகர் என்ற முறையிலும் பெற்றார்.
- 2006ஆம் ஆண்டில் விஜய் விருதுகளை ‘ஐகான் ஆப் தி இயர்’ என்றும், 2010,2011 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்காக ; ‘தெய்வத் திருமகள்’ ‘ராவணன்’ திரைப்படங்களுக்காகவும் வழங்கப்பட்டது.
- காசி திரைப்படத்திற்கான சிறந்த நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’ 2001ஆம் ஆண்டும், ; ‘ஜெமினி’ படத்திற்காக ‘சர்வதேச தமிழ்ப் பட விருதை’ 2002ஆம் ஆண்டிலும், 2010இல் ‘அம்ரிதா பட விருதை’ ‘ராவணன்’ படத்திற்காகவும், 2011ஆம் ஆண்டு ‘விகடன் விருதை’ ‘தெய்வத் திருமகள்’ படத்திற்காகவும் வென்றார் பாடகி சித்ரா.