நடிகை சரோஜாதேவி:-
இந்தியாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் தான் இந்த கேரளத்து பைங்கிளி சரோஜாதேவி. இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலமாக திரைப்படத் துறையில் உள்ளார் . இவர் நடிப்பில் 200 படங்களுக்கு மேல் வெளியாகியது. சினிமா துறையினர் இவருக்கு “அபிநய சரஸ்வதி” , “கன்னடத்துப் பைங்கிளி” போன்ற அடைமொழகளை வைத்து செல்லமாக அழைக்கிறார்கள்.
பல பல திரைப்பட விருதுகளையும், இந்தியாவின் மிக சிறந்த விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் இவர் 60 முதல் 70 வரையான காலப்பகுதிகளில் சுமார் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தார். இவர் தனது முகபாவம் மற்றும் அபிநயங்களிலும் கொஞ்சும் குரலாலும் நம்மையெல்லாம் சொக்கிப்போட்ட ஒரு பைங்கிளி. குறிப்பிட்ட சில காலங்களில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளார் நடிகை சரோஜாதேவி. இப்படிப்பட்ட பெருமைகளை தன்னத்தே கொண்ட சரோஜாதேவியின் வாழ்க்கை வரலாறை தொடர்ந்து பார்ப்போம்.
சரோஜாதேவியின் ஆரம்ப வாழ்க்கை:-
1938ஆம் ஆண்டு ஜனவரி 07 ம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா மற்றும் ருத்ரம்மாவிற் நான்காவது மகளாகப் பிறந்தார். இவர் தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரின் இயற்பெயர் ராதாதேவி என்பதாகும். இவரின் தாத்தா இவரை யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என்று கூற, இவரது தந்தை அதனை மறுத்தார். பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளிக்கூடத்தில் தன்னுடைய ஆரம்ப பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். பள்ளிகளுக்கிடையே நடந்த, ஒரு இசைப்போட்டியில் இவர் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த பள்ளி நிகழ்ச்சிக்கு கன்னடத் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் பட அதிபருமான ஹன்னப்ப பாகவதர் வந்திருந்தார்.
இவர் சரோஜாதேவியின் பாடலைக் கேட்டு இவள் நன்றாக பாடுகிறாள், இவரை சினிமாவில் பின்னணிப் பாட வைக்கலாம்’ என நினைத்து, அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று குரல் வளத்திற்கான சோதனை செய்தார். இவரின் தந்தையார் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்படி கேட்டார். அத்துடன் இவர் நடிப்பை தொழிலாக எடுக்க இவருக்கு மிகவும் ஊக்கம் கொடுத்தார். இதனையடுத்து இவர் தனது தந்தையுடன் அடிக்கடி பல ஸ்டீயோக்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். இதனையடுத்து ஹன்னப்ப பாகவதருக்கு ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது. அதனால், இவர் தான் தயாரித்த கன்னடப்படமான ‘மகாகவி காளிதாஸ்’ என்ற படத்தில், சினிமாத் துறையில் முதன் முதலாக கதாநாயகியாக சரோஜாதேவியை அறிமும் செய்தார்.
1955 ஆம் ஆண்டு ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட சரோஜாதேவியின் நடிப்பில் வெளிவந்த ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவரின் முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இவர் மிகக் குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ‘நடிகர் திலகம் சிவாஜி’ ‘எம்.ஜி.ஆர்’, மற்றும் ‘ஜெமினிகணேசன்’ போன்ற ஜாம்பவான்களுடன், தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.
இவரின் தாயார் இவரது ஆடை விஷயத்தில் மிக கண்டிப்பாக எப்போதும் இருப்பார். அந்தவகைளில் இவருக்கு நீச்சலுடைகள் மற்றும் அறைகுறை ஆடைகள் அணிந்து நடிப்பது முற்றிலும் தடை விதித்தார். இதை சரோஜாதேவியும் தனது வாழ்நாள் முழுவதும் அதைப் பின்பற்றினார். இந்த செயல் தமிழ் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.
தமிழ் திரைப்படத்துறையில் சரோஜாதேவியின் பயணம்:-
கன்னடத்தில் சரோஜாதேவி நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்றார். தமிழ் சினிமாவில் 1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும், தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம் என்றால் அது எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படமாகும்.
இதனையடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் நட்சத்திர அஸ்தஸ்தை , 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம், பெற்றுத்தந்தது. தொடர்ந்து, ‘வாழவைத்த தெய்வம்’,‘குடும்பத்தலைவன்’ , ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’,‘நீதிக்குப் பின் பாசம்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘புதிய பறவை’, ‘ ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘படகோட்டி’, எங்க வீட்டுப் பிள்ளை’,‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்
இவர் நடிகையாகி மிகப்பிரபலம் அடைந்த காலகட்டங்களில் பல பல நடிகைகள் வந்து கலக்கிக் கொண்டிருந்த போதும், ‘சரோஜாதேவி சோப் டப்பா’ என்பது கரவொலியை எழுப்பியது. அந்த அளவுக்கு, சரோஜாதேவி, தன் நடிப்பாலும் தமிழ் உச்சரிப்பாலும் இரண்டு தலைமுறை ரசிகர்களை ஈர்த்திருந்தார்.
சரோஜாதேவியின் சில திரைப்படங்கள்:-
1958இல் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ , ‘நாடோடி மன்னன்’ , ‘சபாஷ் மீனா’ , ‘தேடி வந்த செல்வம்’, 1959இல் ‘பாகப்பிரிவினை’, ‘கல்யாண பரிசு’, ‘வாழவைத்த தெய்வம்’, 1960இல’; ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’, ‘இரும்பு திரை’, ‘பார்த்திபன் கனவு’, ‘மணப்பந்தல்’ , 1961இல் ‘பாலும் பழமும்’, ‘பனித்திரை’, ‘திருடாதே’, 1962இல் ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, 1963இல் ‘இருவர் உள்ளம்’, ‘பெரிய இடத்துப் பெண்’ , ‘பணத் தோட்டம்’, ‘தர்மம் தலைக்காக்கும்’ , ‘நீதிக்குப் பின் பாசம்’ , 1964இல் ‘படகோட்டி’, ‘தெய்வத்தாய்’, ‘புதிய பறவை’, ‘என் கடமை’ , 1965இல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘கலங்கரை விளக்கம்’, 1966இல் ‘நான் ஆணையிட்டால்’ , ‘நாடோடி’ , ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, 1969இல் ‘குல விளக்கு’, 1971இல் ‘தேனும் பாலும்’ , 1988இல் ‘தாய்மேல் ஆணை’, 1989இல் ‘தர்ம தேவன்’, 1997இல் ‘ஒன்ஸ் மோர்’, 2009இல் ‘ஆதவன்’, 2010இல் ‘இளங்கதிர் செல்வன்’.
சரோஜாதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை:-
1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார். இவர்களுக்கு இந்திரா, கௌதமராமசந்திரன், ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வரி என்கிற தனது அக்காவிள் மகளை இவர் தத்தெடுத்து வளர்த்தார். புவனேஸ்வரி இளம் வயதில் இறந்தார் இவரின் நினைவாக சரோஜா தேவி இலக்கியத்திற்கான புவனேஸ்வரி விருதை வழங்குகிறார்.
திருமணத்திற்கு பின் இவரின் கணவர் 1970 முதல் தொடர்ந்து செயல்பட ஊக்குவித்தார், மேலும் அவர்களது திருமண வாழ்க்கை 1986 இல் அவர் இறக்கும் வரை நீடித்தது.
விருதுகளும், மரியாதைகளும்:-
- 1965இல் கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டம்.
- 1969இல் இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
- 1980 இல் கர்நாடக அரசால் ‘அபினண்டன் காஞ்சனா மாலா’ விருது.
- 1989 இல் கர்நாடக அரசின் ‘ராஜ்யோத்சவ’ விருது.
- 1992 இல் மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.
- 1997 இல் சென்னை சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் ‘சாதனையாளர் விருது’.
- 1997 இல் தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர்’ விருது.
- 2001 இல் ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய’ விருது.
- 2003 இல் ‘தினகரன் சாதனையாளர்’ விருது.
- 2006 இல் பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’.
- 2007 இல் ரோட்டரி ‘சிவாஜி’ விருது.
- 2007 இல் ‘என்.டி.ஆர்’ விருது.
- 2008 இல் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இந்திய அரசின் தேசிய விருது’.
- 2009 இல் நாட்டிய ‘கலாதர்’ விருது.
- 2009 இல் கர்நாடக அரசின் ‘ராஜகுமார்’ தேசிய விருது.
- 2010 இல் தமிழ்நாடு அரசின் ‘வாழ்நாள் சாதனையாளருக்கான’ விருது.
ஏறத்தாழ 200 படங்களுக்கு மேலே நடித்த சரோஜாதேவி, எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களோடு ஜோடியாக நடித்திருந்தாலும் அந்த நேரத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் ஜெய்சங்கருடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை. அது பலருக்கும் எப்போதும் ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதனையடுத்து அதற்கு பேட்டி ஒன்றில் சரோஜாதேவி விளக்கம் கொடுத்துள்ளார்.
எனக்கு பல வாய்ப்புகள ஜெய்சங்கருடன் நடிப்பதற்காக வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு கால் சீட் கொடுக்க முடியாமல் பிரச்சனை இருந்தது. மேலும் நான் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் ஜெய்சங்கரின் திரைப்பட வாய்ப்பு வரும்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு நான் பிஸியாக இருந்தேன். இதனால் என்னால் நடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். ஆனாலும் அவர் நடித்த திரைப்படத்தில் நான் ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அது அவருடன் ஜோடியாக இணைந்து நடிக்கவில்லை. அவரோடு நான் நடிக்காததற்கு வேறு எந்த காரணமும் இல்லை. நானும் முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு அடுத்தடுத்த படங்கள் காரணமாக கால் சீட் பிரச்சனை மற்றும் அந்த ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.
எம்ஜிஆருடன் ஏறத்தாழ 26 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி. ’’சிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த 22 படங்களில் நடித்தவர், மேலும் இவர் சிவாஜியுடன் நடித்த படங்களிலும் தன் நடிப்புத் திறனை மிகத் துள்ளியமாக வெளிக்காட்டியிருப் பார். தமிழக ரசிகர்களும் இவரை இதற்காக பாராட்டினார்கள்.
இந்தியாவின் திரைப்படத்துறையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கும் மேல் முன்னணிக் கதாநாயகியாக விளங்கிய இவர், தன்னுடைய நடிப்பிற்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர். ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம் என அனைத்திலும் வித்தியாச வித்தியாசமான புதுமைகளைப் புகுத்தியவர். இவர் தனது நடிப்பில் நடை, உடை, பாவனையில் கூட பல அபிநயங்களை வெளிபடுத்தி நடிப்புக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் எனலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமா துறைக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம்! சரோஜாதேவி அவர்கள்.