
கவின், அபர்ணா தாஸ் நடித்த டாடா படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் டாடா. தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் காட்சிகள் கொண்ட படங்கள் வெளி வந்திருந்தாலும், காதல் காட்சிகளில் கொஞ்சம் காமத்தையும் சேர்த்து விவகாரமாகவும், வித்தியாசமான கொண்ட கதையாகவும் என்று சொல்லப்படாத கதையை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் கே பாபு. இதற்கு அவருக்கு பாராட்டு சொல்லியாக வேண்டும்.
வழக்கம் போன்று, காதலர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவை தள்ளி வைத்துவிட்டு, ஈகோ பிரச்சனையை காதலாக்கி, அதிலேயும் குழந்தை பிரச்சனையை கொண்டு வந்து காதலர்கள் இருவரையும் ஈகோவால் பிரித்து வைக்கிறார் இயக்குநர். இதை ரசிக்கும்படியாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்துள்ளார்.
Also Read – ஆரம்பிச்ச இடத்துக்கே வந்த இயக்குநர்: துருவ நட்சத்திரம் அப்டேட்!
கல்லூரியில் படிக்கும் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் லவ்வர்ஸ். ஒரு கட்டத்தில் இந்த காதல் எல்லை மீற, அபர்ணா தாஸ் கர்ப்பமாகிறார். கவின் கர்ப்பத்தை கலைக்க சொல்ல, அபர்ணா மறுப்பு சொல்ல, இந்த விவகாரம் குடும்பத்திற்கு தெரியவர இருவரும் தனித்துவிடப்படுகிறார்கள். அதன் பிறகு கணவன் மனைவி போன்று வாடகைக்கு வீடு எடுத்து அதில் தங்கி குடும்பம் நடத்துகிறார்கள்.

ஒரு நாள் பெரிய சண்டை வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த கவின் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஆபிசிற்கு சென்றுவிடுகிறார். அந்த நேர பார்த்து அபர்ணா தாஸிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவனையில் குழந்தை பெற்றெடுக்கிறார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு விவரம் தெரியவர மருத்துவமனைக்கு ஓடுகிறார். அங்கு குழந்தை மட்டுமே இருக்கிறது. அபர்ணா தாஸ் அவரது பெற்றோருடன் சென்றுவிடுகிறார்.
இனிமேல் தனக்கு குழந்தை மட்டுமே தான் எல்லாமே என்று குழந்தையை வளர்க்க ஆரம்பிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? அபர்ணா தாஸ் கவின் இருவரும் சேர்ந்தார்களா என்பது மீதி கதை. அண்மை காலமாக காதல் காட்சிகள் கொண்ட படங்கள் வித்தியாசமாக கதைக்களத்துடன் வெளியாகி வருகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் லவ் டுடே படத்தை சொல்லலாம்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
அப்பா கதாபாத்திரத்தில் வரும் பாக்யராஜ் பெரியளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதே போன்று தான் ஐஸ்வர்யாவுக்கும். விடிவி கணேஷ், பிரேம் ஆண்டனி, கவின் மகனாக வரும் மாஸ்டர் இளன், கவினின் நண்பனாக வரும் ஹரிஷ் ஆகியோர் தங்களது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் கிளாப்ஸை பெறுகிறார்கள். ஜென் மார்ட்டினைப் பார்த்தால் அறிமுக இசையமைப்பாளர் போன்று தெரியவில்லை. அந்தளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். என்னதான் காதலர்களாக இருந்தாலும், பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது விஐபி தமிழ் ஆன்லைன் வாயிலாக நாங்கள் சொல்லும் அட்வைஸ்….