
அட்டகத்தி தினேஷ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். எப்போதும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். பெரும்பாலும் சமூக கதைகளை மையப்படுத்தி படம் எடுப்பதை ஆதரிப்பவர். இவரது இயக்கத்தில் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பேட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை கொடுத்துள்ளார். தற்போது பரதேசி படம் போன்று தங்கலான் என்ற படத்தை வெளியிட இருக்கிறார். முழுக்க முழுக்க தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.
ஒரு இயக்குரோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருக்கிறார். தனது நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், பொம்மை நாயகி என்று ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது மற்றொரு படத்தையும் தயாரிக்கிறார். இயக்குநர் அதியன் ஆதிரை எழுதி இயக்கும் தண்டகாரண்யம் என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அதியன் ஆதிரை எழுதி இயக்கும் 2ஆவது படம். இந்தப் படத்தின் டைட்டில் குறித்து நேற்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, இந்தப் படத்திற்உ தண்டகாரண்யம் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அட்டகத்தி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த பா ரஞ்சித் இந்தப் படத்திலும் நடிக்கிறார். இவருடன் கலையரசன் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.