
பகாசூரன் படத்தின் மேக்கிங் வீடியோ தீம் மியூசிக் உடன் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என்று பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகரும் கூட. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தான் அதிகளவில் வலம் வந்துள்ளார்.
பீஸ்ட், சாணிகாயிதம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநரான மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பகாசூரன் படத்தில் நட்டி என்ற நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஎச் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வரும் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. அதில், படம் உருவான விதம் காட்டப்பட்டுள்ளது. ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த கதையும் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இயக்குநர் தெளிவாக காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here is #Bakasuran Theme music..
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) February 3, 2023
🎹🎷🥁 https://t.co/9Tj5LsEvR2
A @SamCSmusic Musical @mohandreamer @natty_nataraj @Gtm0789 @Mrtmusicoff @Gmfilmcorporat1 pic.twitter.com/Ctq6sHF0es