
விஜய் அண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது. அம்மாவின் உடல்நிலை சரியாக கோடீஸ்வரன் பிச்சைக்காரனாகி பிச்சை எடுக்கும் கதையை மையப்படுத்தி இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 உருவாகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, அதில் நடிக்கவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே தான் இந்தப் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளார். இந்த நிலையில், ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன் 2 படத்தின் 4 நிமிட ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா? அரசு இதற்கு அனுமதி வழங்குமா? என்றெல்லாம் விவாதம் நடக்கிறது.
Also Read – ஆரம்பிச்ச இடத்துக்கே வந்த இயக்குநர்: துருவ நட்சத்திரம் அப்டேட்!
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வீடியோ 4 நிமிடம் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக டீசர், டிரைலர் எல்லாம் 2 நிமிடமோ, ஒரு நிமிடமோ தான். ஆனால், ஸ்னீக் பீக் வீடியோ 4 நிமிடம் வெளியாகியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.