
துருவ நட்சத்திரம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் கடந்த 2015 ஆண்டு துருவ நட்சத்திரம் என்ற படத்தின் கதையை வைத்திருந்தார். இந்தக் கதைக்கு விக்ரம் தான் சரியான தேர்வு என்று அவரிடம் ஓகே சொல்லி, அவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், பைனான்சியர் கிடைக்காததால், இந்தப் படம அப்படியே கைவிடப்பட்டது. அதன் பிறகு ஜெயம் ரவியை வைத்து இந்தப் படம் உருவாக இருந்தது. ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்காததால் மறுபடியும் இந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கலைப்புலி எஸ் தாணுவிடம் இந்தப் படத்தின் கதையை கௌதம் மேனன் சொல்லியிருக்கிறார். இருவரும் ரஜினிகாந்திடம் இந்தக் கதையை சொல்லி ஓகே வாங்க அவரைப் பார்க்க சென்று கதையையும் சொல்லியிருக்கின்றனர்.
ரஜினியும் ஓகே சொல்லியிருக்கிறார். அதற்குள்ளாக தாணுவிற்கு கபாலி படம் வரவே துருவ நட்சத்திரம் படக் கதையை கிடப்பில் போட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் விக்ரமை வைத்து பட வேலைகளை தயார் செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படத்தின் போஸ்டர்களுடன் நியூயார்க்கில் வைத்து படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யபட்ட்டுள்ளார். அதன் பிறகு அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு போட்டோஷூட் நடத்தப்பட்ட, ஜனவரி மாதத்திலேயே 2 நிமிட டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விக்ரம் மற்றும் அனு இம்மானுவேல் இருவரும் கடைசியாக உறுதி செய்யப்பட்டனர். ஆனால், அங்கேயும் சிக்கல் வந்தது. விக்ரம் மற்றும் அனு இம்மானுவேல் இருவருக்கும் கால்ஷீட் மாறி மாறி வரவே, அனு இம்மானுவேல் இந்தப் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு தான் ரித்து வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷூம் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி மாத இறுதியில் நியூயார்க் ஷூட்டை முடித்த கையோடு படக்குழு குன்னூர் சென்றனர். இதையடுத்து சென்னையில் ஷூட் செய்தனர். சென்னை மற்றும் குன்னூர் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழுவினர் வெளிநாட்டிற்கு சென்று படமாக்க திட்டமிட்டனர். சால்வேனியா, அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்தான்புல் ஆகிய பகுதிகளில் படப்பிட்ப்பு நடந்துள்ளது.
இன்னும் 60 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கௌதம் மேனம் கூறியிருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் முடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் கடந்த மாதம் இந்தப் படத்தின் மீதமுள்ள பகுதிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அந்தப் போஸ்டரில் விரைவில் ஜான் உங்களை சந்திப்பார் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

எப்படியும் இந்த ஆண்டுக்குள் துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விக்ரம் உடன் இணைந்து திவ்யதர்ஷினி, சலீம் பேக், பிரீத்தி நெடுமாறன், அபிராமி வெங்கடாஜாலம், மாயா எஸ் கிருஷ்ணன், முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணன், ராதிகா, அருண் தாஸ், வம்சி கிருஷ்ணா, பார்த்திபன், அர்ஜூன் தாஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.