
லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடந்து வருகிறது.
மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – விஜய் காம்பினேஷனில் உருவாகி வரும் 2ஆவது படம் லியோ. விஜய்யின் 67ஆவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தளபதி விஜய் படக்குழுவினர் கிட்டத்தட்ட 180 பேருடன் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு லியோ படத்தின் 2ஆவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், சண்டை மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
முழுக்க முழ்க்க ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மிஷ்கின் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இது தவிர கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் ஏஜெண்ட் டீனா ஆகியோர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தளபதி67 படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் ரிலீஸ் தொடர்பான புரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், லியோ என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, ஒரே ஆண்டில் விஜய் வெளியிடும் 2ஆவது படம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
And here he comes! 🔥💣#LEO is here to strike unabashedly! ❤️🔥
— Sony Music South (@SonyMusicSouth) February 3, 2023
It truly is #BloodySweet! 💥
➡️ https://t.co/eZWwvFIi8Z#Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 pic.twitter.com/zdTEDiAeWo
- இந்த நிலையில், லியோ புரோமோ வீடியோவும், விக்ரம் புரோமோ வீடியும் ஒன்று போல இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- இரண்டு வீடியோக்களிலும் தனிதாக இருக்கும் வீடு.
- இரு ஹீரோக்களும் ஜன்னல் அருகில் இருக்கும் காட்சி
- வலது கண்ணிற்கு மட்டுமே குளோசப் ஷாட்
- பின்னணியில் டைனிங் டேபிள்
- விக்ரம் படத்தில் கமல் சமையல் செய்கிறார்.
- லியோ படத்தில் விஜய் சாக்லெட் செய்கிறார்.
- விக்ரம் படம் வெளியாவதற்கு முன்னதாக புரோமோ வீடியோ வெளியானது. ஆனால், படம் வெளியான பிறகு பார்த்தால் படத்திற்கும், வீடியோவிற்கு எந்த தொடர்பும் இல்லை. அது போன்று தான் லியோ படத்தின் புரோமோ வீடியோ வெளியான நிலையில், படம் வெளியான பிறகு தான் இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா என்பதை கணித்து கூற முடியும்.