
இந்த வார எபிசோட்டிற்கு ஜிபி முத்து வித்தியாசமான உடை அணிந்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. யாராக இருந்தாலும் உயிர் வாழ்வதற்கு சோறு தான முக்கியம். சமையல் கலையை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 10 குக் மற்றும் 10 கோமாளி என்று ஒவ்வொருவரையும் தேர்வு செய்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது.
Also Read – AK62 அப்டேட்: மார்ச்சில் படப்பிடிப்பு தொடக்கம்?
அந்த வகையில் இந்த குக் வித் கோமாளியின் 4ஆவது சீசனில் விஜே விஷால், நடிகை விசித்ரா, ஷிவாங்கி, ஆண்ட்ரியா நௌரிகட் என்ற ஆன்டி (பிரான்ஸ் நடிகை), கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் ஷ்ரிங்கர், ராஜ் அய்யப்பா, நடிகர் காளையன், மைம் கோபி ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கோமாளிகளாக டிக் டாக் புகழ் ஜிபி முத்து, மணிமேகலை, புகழ், சுனிதா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, ரவீனா டாகா, சில்மிஷம் சிவா, தங்கதுரை, முகமது குரேஷி, ஓட்டேரி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். மைம் கோபி தனது மகனுக்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியிருக்கிறார்.
முதல் வாரத்தில் நடந்த ஃபர்ஸ்ட் மற்றும் 2ஆவது எபிசோடில் ஓட்டேரி சிவா கலந்து கொண்டார். ஆனால், அதன் பிறகு நடந்த 3ஆவது மற்றும் 4ஆவது எபிசோடில் அவருக்குப் பதிலாக தங்கதுரை கலந்து கொண்டார். காரணம் என்னவென்றால், குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குடித்துவிட்டு வந்ததாக கூறி அவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கியுள்ளது குக் வித் கோமாளி டீம். இதனால் தான் தங்கதுரை டீமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Also Read – தமிழ் புத்தாண்டை குறி வைத்த சகுந்தலம் டீம்: இதுல மாற்றம் வருமா?
கடந்த வாரம் நடந்த இம்மூனிட்டி சேலஞ்ச் ரவுண்டில் விஜே விஷால் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் நடக்க இருக்கிறது. இதற்கான புரோமோ வீடியோவில் குறைந்த புள்ளிகள் பெற்று காளையன், கிஷோர் ராஜ்குமார், ஷெரின் ஷ்ரிங்கர் ஆகியோர் டேஞ்சர் சோனில் இடம் பெற்றுள்ளனர். டேஞ்சர் சோனில் இடம் பெற்றுள்ள காளையன் மற்றும் ஷெரினுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதாலும், புகழ் – காளையன் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட்டாகி வருவதாலும் அவர் இந்த வாரம் எலிமிஷேனிலிருந்து தப்பித்துக் கொள்வார்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
அதே போன்று தான் ஷெரினும் இந்த வாரம் தப்பித்துக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது. மாறாக கிஷோர் ராஜ்குமார் வந்ததற்கு எந்த பயனும் இல்லை. அவர் அவராகவே நிகழ்ச்சியில் இருந்தார். இதன் காரணமாக அவர் எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி இந்த வாரம் ஒவ்வொரு கோமாளியும் வித விதமாய், வித்தியாசமாய் உடை அணிந்து வருகின்றனர். அதிலும் ஜிபி முத்துவின் உடை ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இந்த வார எபிசோடில் புகழ் மற்றும் ஜிபி முத்துவை காளையன் வச்சு செய்யும் புரோமோ வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களை பச்சை மிளகாய் சாப்பிட வைத்து ரசித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு கவின் தனது டாடா பட புரோமோஷனுக்காக சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.