
கருணாஸின் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் வந்த நந்தா படம் மூலம் லொடுக்கு பாண்டியாக என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவி அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து பேசாத கண்ணும் பேசுமே, 123, பாபா, வில்லன், காதல் அழிவதில்லை, ஆல்பம், ஜெயா, புதிய கீதை, ஈ, தொலைபேசி, தனம், ராஜாதி ராஜா, உத்தம புத்திரன், புலி, ஜித்தன் 2 என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் கால் பதித்துள்ளார்.
Also Read – AK62 அப்டேட்: மார்ச்சில் படப்பிடிப்பு தொடக்கம்?
அண்மையில், கருணாஸ் நடிப்பில் விருமன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் வெளியானது. கருணாஸ் மட்டுமின்றி கருணாஸின் மனைவி கிரேஸ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். இவரது மகன் கென் கருணாஸ் அசுரன் படத்தில் நடித்துள்ளார். அதோடு உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். வாத்தி படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கிரேஸ் கருணாஸ் குக் வித் கோமாளி மற்றும் கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டுள்ளார்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
இந்த நிலையில் கருணாஸின் மகள் டயனாவின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. டாக்டருக்கு படித்து முடித்து டயானாவின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்துள்ளது. தனது மகளுக்கு திருமண ஆவதைக் கண்ட கிரேஸ் கருணாஸ் ஆனந்த கண்ணீர் வடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டயானாவின் திருமணம் குறித்து கென் கருணாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இனிய திருமண வாழ்த்துகள் அக்கா மற்றும் மாமா என கென் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.
