
சிம்புவின் பத்து தல படத்தின் நம்ம சத்தம் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிம்பு. நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள சிம்பு தற்போது இயக்குநர் ஒப்பிலி என் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்பு உடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே அருணாச்சலம், கௌதம் மேனன், மனுஷ்யபுத்ரன், அனு சித்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் பென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக கே இ ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து திரைக்கு வருவதற்கு தயாராகியுள்ளது. முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பிறகு 2023 மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் திரைக்கு வந்த பிறகு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கன்னடத்தில் வெளியான முஃப்தி என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிம்புவின் 40ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் நம்ம சத்தம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் யோகி சேகர் இருவரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். அக்கறையில் நிக்குற வரை எட்டுது நம்ம சத்தம் என்ற பாடலின் லிரிக் வீடியோவிற்கு சிம்பு பிளாக் அண்ட் பிளாக் உடையில் நடனம் ஆடி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hbd #SilambarasanTR #simbu #PathuThalaFromMarch30 #NammaSatham first single lyrical video out now https://t.co/B4xwSjmX2P pic.twitter.com/Sr4DDN4yT7
— VIP Tamil Online (@viptamilonline) February 2, 2023