
குக் வித் கோமாளி சீசனில் முதல் வாரத்தில் வந்த புது கோமாளி 2ஆவது வாரத்தில் இடம் பெறதாதது குறித்து முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. யாராக இருந்தாலும் உயிர் வாழ்வதற்கு சோறு தான முக்கியம். சமையல் கலையை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 10 குக் மற்றும் 10 கோமாளி என்று ஒவ்வொருவரையும் தேர்வு செய்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த குக் வித் கோமாளியின் 4ஆவது சீசனில் விஜே விஷால், நடிகை விசித்ரா, ஷிவாங்கி, ஆண்ட்ரியா நௌரிகட் என்ற ஆன்டி (பிரான்ஸ் நடிகை), கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் ஷ்ரிங்கர், ராஜ் அய்யப்பா, நடிகர் காளையன், மைம் கோபி ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கோமாளிகளாக டிக் டாக் புகழ் ஜிபி முத்து, மணிமேகலை, புகழ், சுனிதா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, ரவீனா டாகா, சில்மிஷம் சிவா, தங்கதுரை, முகமது குரேஷி, ஓட்டேரி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் வாரத்தில் நடந்த ஃபர்ஸ்ட் மற்றும் 2ஆவது எபிசோடில் ஓட்டேரி சிவா கலந்து கொண்டார். ஆனால், அதன் பிறகு நடந்த 3ஆவது மற்றும் 4ஆவது எபிசோடில் அவருக்குப் பதிலாக தங்கதுரை கலந்து கொண்டார். காரணம் என்னவென்றால், குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குடித்துவிட்டு வந்ததாக கூறி அவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கியுள்ளது குக் வித் கோமாளி டீம். இதனால் தான் தங்கதுரை டீமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு குடிப்பழக்கமே கிடையாது. இப்போது கூட விஷால் சார் ஆபிசில் தான் இருக்கிறேன். வேண்டுமென்றால் அவரிடம் வந்து கேட்டு பாருங்கள். வயிறு நிறைய சாப்பிட வேண்டுமென்றால் செய்வேனே தவிர குடிக்கவே மாட்டேன். என் அம்மா மீது சத்தியமாக இது உண்மை என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.