
லியோ படப்பிடிப்பு -5 டிகிரி குளிரில் நடந்து வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் காம்பினேஷனில் உருவாகும் 2ஆவது புதிய படம் லியோ. தளபதி67 என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு அதிகாரப்பூர்வமாக லியோ என்று தயாரிப்பு நிறுவனம் பெயரிட்டுள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
இவர்களுடன் ஏஜெண்ட் டீனா என்ற வசந்தியும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு கமல் ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரது பெயரும் இந்தப் படத்தில் அடிபடுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர்.
கிட்டத்தட்ட 180 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் காஷ்மீர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு 2ஆவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. கண்டிப்பாக பாடல் காட்சிகள் படமாக்கப்படும். ஏனென்றால், தினேஷ் மாஸ்டர் காஷ்மீர் சென்றுள்ளார்.
Also Read – தமிழ் புத்தாண்டை குறி வைத்த சகுந்தலம் டீம்: இதுல மாற்றம் வருமா?
ஜம்மு காஷ்மீர் சென்ற த்ரிஷாவிற்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் அவரச அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வரும் நிலையில், த்ரிஷாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை திரும்பியுள்ளார். ஆனால், அவர் தொடர்பான அனைத்து காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் சென்னை திரும்பியிருக்கிறார் என்று படக்குழு கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, அவர் லியோ படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம், த்ரிஷாவின் தாயார், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: த்ரிஷா ஜம்மு காஷ்மீரில் தான் இருக்கிறார். அவர் உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை. படத்திலிருந்து விலகவும் இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
Also Read – மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா? பிச்சைக்காரன் 2
தன்னைப் பற்றி வந்த எல்லா வதந்திகளுக்கும் த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக, குளிர் தாங்க முடியாததால் திரிஷா டெல்லிக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். இதையடுத்து தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ளார். விமானத்தில் சென்ற போது காஷ்மீர் முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சூழப்பட்டு இருக்கும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலமான் தான் லியோ படத்திலிருந்து விலகவில்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.
காஷ்மீரில் -5 டிகிரி குளிர் நிலவி வரும் நிலையில் எவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.