
ஜான்வி கபூர் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று போனி கபூர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளருமான திகழ்பவர் போனி கபூர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இவரது மகள் ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோரது நடிப்பில் வந்த பையா படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருக்கிறது. இதில், கார்த்திக்கு பதிலாக ஆர்யா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும், இது குறித்து அவரிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இது குறித்து ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர், ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் நடிப்பதற்கு ஒப்பதம் செய்யப்படவில்லை. யாரும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Dear Media Friends,
— Boney Kapoor (@BoneyKapoor) February 3, 2023
This is to bring to your notice that Janhvi Kapoor has not committed to any Tamil Films at the moment, requesting not to spread false rumors.