
சகோதரனுக்கு திடீரென்று திருமணம் நடந்துள்ளது என்று கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சின்னமணிக்குயிலே என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் பிரியதர்ஷன். ஆனால், இந்தப் படம் திரைக்கு வரவில்லை. அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிநேகிதியே என்ற படத்தை இயக்கினார். பிந்தாஸ்ட் என்ற மராத்தி படத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது. லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர், Sometimes, நவரசா (வெப் சீரிஸ்) என்று தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

ஆனால், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை கொடுத்துள்ளார். தற்போது மலையாளத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதுவரையில் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 95 படங்கள் இயக்கியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் காலூன்றி வருகிறார். இவருக்கு லிஸ்ஸி என்ற மனைவியும், சித்தார்த் என்ற மகனும், கல்யாணி பிரிதர்ஷ்னி என்ற மகளும் இருக்கின்றனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கல்யாணி பிரியத்ர்ஷன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இன்னும் சரியான கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் அவருக்கு நல்ல பெயர் கொடுத்தது. நடிகை லிஸ்ஸி 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரம், ஆனந்தி ஆராதனை, பகலில் பொறுமை, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் மற்றும் லிஸ்ஸி தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், கல்யாணி பிரியதர்ஷனின் சகோதரனான சித்தார்த் பிரியதர்ஷனுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த விஷுவல் எபெக்ட் புரோடியூசர் (VFX Producer) மெர்லின் என்பவருக்கு திடீரென்று திருமணம் நடந்துள்ளது. இது குறித்து, கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்று (நேற்று முன்தினம்) எனது சகோதரனின் திருமணத்தை மிகவும் விசேஷமாக குடும்பத்துடன் கொண்டாடினோம். நான் எப்போதும் விரும்பும் சகோதரியாக மெலனி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். சித்தார்த் மற்றும் மெர்லின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last evening we celebrated my brother’s marriage in the most special and intimate ceremony at home with just family. Im so excited to have Melanie be the sister I’ve always wanted ♥️. Hope we all have your blessings 🙏🏻 pic.twitter.com/6fhIDYFqJ1
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) February 4, 2023