
லியோ படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படம் லியோ. தளபதி67 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தற்போது அதிகாரப்பூர்வமாக லியோ – ப்ளடி ஸ்வீட் என்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் வைக்கப்பட்டது. தளபதி67 படத்தின் டைட்டில் புரோமோவில் விஜய் முதலில் பேக்கரியில் சாக்லெட் செய்வது போன்றும், 2ஆவதாக பட்டறையில் நின்று கொண்டு கத்தி செய்வது போன்றும் காட்டப்பட்டு இறுதியாக படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி என்பது வியாழக்கிழமை. அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 24 ஆம் தேதி விஜயதசமி. அப்படியிருக்கும் போது வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் லியோ படத்தை அன்றைய தேதியில் வெளியிட்டால் வசூல் அள்ளலாம் என்று படக்குழு பிளான் பண்ணி லியோ படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிடுகிறது.

தளபதி விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதோடு தீவிரமாகவும் இருப்பார்கள். அப்படியிருக்கையில், இன்று தான் டைட்டிலும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக கேரளாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஆலப்புழா ரசிகர்களின் லியோ படத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் லியோ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Alapuzha VFC FDFS Ticket Of #Leo SoldOut 🫡🔥 Unreal Hype🛐 pic.twitter.com/n0FG1ENhCM
— Actor Vijay Universe (@ActorVijayUniv) February 3, 2023