
விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரிலிருந்து ஏகே62 என்பதை நீக்கியுள்ளார்.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நானும் ரௌடிதான் படத்தை இயக்கி நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தப் படத்தைத் தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, அஜித்குமார் நடிப்பில் உருவாகும் ஏகே62 படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏகே62 படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அதோடு, திரையரங்கில் வெளியான பிறகு நெட்பிளிக்ஸில் வெளியிட அந்நிறுவனம் ரூ.75 கோடிக்கு ஏகே62 படத்தை கைப்பற்றியது.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாக்கூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது. மேலும், அஜித்துக்கு வில்லனாக அரவிந்த் சாமியும், காமெடி ரோலில் சந்தானமும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் ஒன் லைன் கதையை மட்டுமே சொல்லி அஜித்தை ஓகே சொல்ல வைத்ததாகவும், லைகா நிறுவனம் முழு கதையையும் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், கடைசி வரை முழு கதையை விக்னேஷ் சிவன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதே போன்று பிரச்சனை தான், விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் உருவாக இருந்த புதிய படத்தையும் லைகா நிறுவனம் கைவிட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விக்னேஷ் சிவன் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி புதிய கதையை சொல்ல அஜித்து ஓகே சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதை லைகா நிறுவனத்திற்கும் பிடித்து போக ஏகே62 படமும் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில், அவருக்கு பதிலாக இளம் இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏகே62 என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த விக்னேஷ் சிவன் அதனை நீக்கியுள்ளார். இதுவரையில் போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், எல்விபி, காத்துவாக்குல ரெண்டு காதல் என்று 5 படங்களை இயக்கியுள்ளார். 6ஆவது படமாக ஏகே62 உருவாக இருந்த நிலையில், அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக Wikki6 என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Dir #VigneshShivN has removed #AK62 from his Twitter Bio..
— Ramesh Bala (@rameshlaus) February 4, 2023
This confirms he will no longer direct #AK62 pic.twitter.com/6Luc1UAaa7