
வரும் மே மாதத்திற்குள்ளாக படத்தை முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று மாஸ் ஹீரோ தனது இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் – லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவாகும் 2 ஆவது படம் லியோ. சென்னை படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழுவினர் காஷ்மீர் சென்று படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அங்கு -5 டிகிரி குளிர் நிலவுவதால் படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே த்ரிஷா குளிர் தாங்கமுடியாமல் டெல்லி புறப்பட்டு வந்து ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார்.
லியோ என்று டைட்டில் வைத்திருக்கும் நிலையில், இந்தப் படம் ரூ.246 கோடி வரையில் வெளியீட்டிற்கு முன்னதாக வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இது போன்று வேறு எந்தப் படமும் செய்யவில்லை. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
Also Read – சூர்யா – பாலா பஞ்சாயத்து தெரிந்தும், ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்!
இவர்களுடன் ஏஜெண்ட் டீனா என்ற வசந்தியும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு கமல் ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரது பெயரும் இந்தப் படத்தில் அடிபடுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தை வரும் மே மாதத்திற்குள்ளாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநரிடம் விஜய் கூறியுள்ளதாக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 68ஆவது படமான தளபதி68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். அதுமட்டுமின்றி தளபதி69 படத்தை, இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.