தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ஆக்ஷன் காமெடி கலந்தை கதையை மையபடுத்தி ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இது ரஜினிகாந்தின் 169ஆவது படம்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஷிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், யோகி பாபு, மோகன்லால் (சிறப்பு தோற்றம் – 2 நாள் கால்ஷீட் மட்டும்) ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் டான்சர் ரமேஷ் இணைந்திருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சென்னை, ஹைதராபாத், கடலூர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் எல்லாம் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜாக்கி ஷெராஃபின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது மங்களூர் பகுதியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
இதே போன்று கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் தகவல் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக இரு படங்களுமே நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இதற்கு முன்னதாக ரஜினியின் சந்திரமுகி படமும், கமல் ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் படமும், இந்தியன் 2 படமும் ஒரே நாளில் வெளியாவதாக சொல்லப்படுகிறது.
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது.