
வாத்தி இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் தனது மகன்களுடன் வந்துள்ளார்.
நானே வருவேன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் வாத்தி. இந்தப் படத்தில் தனுஷ் முதல் முறையாக வாத்தியாராக பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக சூர்யதேவரா நாக வம்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வாத்தி படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன், சமுத்திரக்க்னி, தனிகெல்லா பரணி, ஆடுகளம் நரேன், ஹைபர் ஆதி, ஹரீஷ் பேரடி, பிரவீனா, தோட்டாபல்லி மது என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில், வரும் 17 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக தனுஷின் மூத்த சகோதரர் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படமும் வெளியாகிறது. இந்த நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் இன்று நடந்துள்ளது. வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள மொத்த பாடல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வாத்தி இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் வருகை தந்துள்ளார். அதுமட்டுமின்றி வழக்கம் போல் இந்தப் படத்திற்கு பட்டு வேஷ்டி சட்டையில் வந்துள்ளார். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால், அதிக முடியுடனும், தாடியுடனும் வந்துள்ளார். இது அடுத்த படத்திற்கான கெட்டப்பா அல்லது போட்டோஷூட் எடுக்கவா என்பது குறித்து விரைவில் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாத்தி படத்தைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் என்ற தமிழ் படம் ஒன்றிலும் தனுஷ் நடித்து வருகிறார்.
பிரம்மாண்டமாக நடந்த வாத்தி ஆடியோ லாஞ்ச் – வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே பாடல் வெளியீடு! – VIP Tamil Online#VaathiAudioLaunch #dhanush #trending https://t.co/acKSwdbEZr
— VIP Tamil Online (@viptamilonline) February 4, 2023
வாத்தி படத்தில் வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
