
ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான வரலாற்று படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமர், ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இரண்டு பகுதிகளாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.
ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து, பொன்னியின் செல்வம் 2 வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக முக்கியமான தகவல் வந்துள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.