
நடிகர் ஜான் கொக்கன் மற்றும் நடிகை பூஜா தம்பதியினர் வளைகாப்பின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
சூர்யா நடிப்பில் வந்த 7ஆம் அறிவு படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ராமச்சந்திரன். காதலில் சொதப்புவது எப்படி, லவ் பெயிலர், நண்பன், பீட்சா, லக்கி ஸ்டார், காஞ்சனா 2, வெங்கி மாமா, களம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு விஜே கிரைக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி நடிகர் ஜான் கொக்கன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Also Read – AK62 அப்டேட்: மார்ச்சில் படப்பிடிப்பு தொடக்கம்?
பூஜா எஸ் எஸ் மியூசிக்கில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி மாடலாகவும் இருந்துள்ளார். ஜான் கொக்கைன், சார்படடா பரம்பரை, வீரம், கேஜிஎஃப், துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜான் கொக்கைன் மற்றும் பூஜா தம்பதியினர் வளைகாப்பின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பூஜா கூறியிருப்பதாவது: எனக்கு பிடித்த மனிதனுடன் ஒரு மனிதனை உருவாக்குவதை விட உற்சாகமானது எதுவுமில்லை. எங்கள் வாழ்வின் புதிய கட்டத்தில் பெண்மை, காதல், நட்பு ஆகியவற்றை கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Also Read – மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா? பிச்சைக்காரன் 2
