
ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ஆக்ஷன் காமெடி கலந்தை கதையை மையபடுத்தி ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இது ரஜினிகாந்தின் 169ஆவது படம். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஷிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், யோகி பாபு, மோகன்லால் (சிறப்பு தோற்றம் – 2 நாள் கால்ஷீட் மட்டும்) ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
இந்தப் படத்தில் டான்சர் ரமேஷ் இணைந்திருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சென்னை, ஹைதராபாத், கடலூர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் எல்லாம் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜாக்கி ஷெராஃபின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது மங்களூர் பகுதியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் சண்டைக்காட்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read – தமிழ் புத்தாண்டை குறி வைத்த சகுந்தலம் டீம்: இதுல மாற்றம் வருமா?
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா நடிப்பில் வந்த ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.