
வாரிசு படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. தில் ராஜூ இந்தப் படத்தை தயாரித்திருந்தார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இவரது இசையில் வந்த ஒவ்வொரு பாடல்களும் கால்களை தானாகவே ஆட வைக்கிறது. மனதை குதூகளப்படுத்துகிறது. அதிலேயும் ரஞ்சிதமே என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷாம், எஸ் ஜே சூர்யா, விடிவி கணேஷ், ஜெயசுதா, ஸ்ரீமன், கணேஷ் வெங்கட்ராமன், சம்யுக்தா, யோகி பாபு, சரத்குமார், பிரபு என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு, வாரிசு வெளியாகி 25 நாட்களையும் கடந்துள்ளது.

இந்த நிலையில், வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் அமைத்துக் கொடுக்க, தளபதி விஜய் மற்றும் எம் எம் மானசி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலின் வீடியோ வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் முழுவதும் லியோ படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது அதற்கு சிறு இடைவேளை விடப்பட்டுள்ள நிலையில், வாரிசு அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கிறது.