
ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ரன் பேபி ரன்.
கிட்டத்தட்ட பார்த்தால் கில்லி படம் மாதிரி தான். அதாவது ஹீரோயினை வீட்டில் தங்க வைத்து, அதன் பிறகு அவரை வெளிநாடு அனுப்பி வைக்க முயற்சி செய்து, இறுதியில் அவரை காதலிக்கும் கில்லி படம் மாதிரி தான் ரன் பேபி ரன். ஆனால், என்ன இதில், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்யப்பட்டிருப்பார்.
வங்கி வேலை, கை நிறைய சம்பளம், கார், வீடு என்று சொகுசாக வாழ்ந்து வருபவர் ஆர் ஜே பாலாஜி (சத்யா). ஒரு கட்டத்தில் ரௌடிகளிடமிருந்து தப்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் (தாரா), சத்யாவின் காரில் ஏறிவிடுகிறார். அம்மணி ஏதோ பிரச்சனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட சத்யா, விருப்பமே இல்லாமல் தனது வீட்டில் தங்க வைத்துவிடுகிறார். ஆனால், அடுத்த நாள், தாரா இறந்து கிடக்கிறார். அதன் பிறகு சத்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது, அவர் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை.
வங்கி ஊழியரான சத்யா கிட்டத்தட்ட போலீஸ் மாதிரி எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார். இதுவரை, காமெடி படங்களில் கலக்கியிருந்த ஆர் ஜே பாலாஜி முதல் முறையாக சீரியஸ் அவதாரம் காட்டியிருக்கிறார். இறந்து போன ஐஸ்வர்யா ராஜேஷின் உடலை பெட்டிக்குள் வைத்து அலையும் காட்சிகள் காண்போரை பதர வைக்கிறது.

விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதியைப் போன்று பின்பாதியையும் அவ்வாறே எழுதியிருக்கலாம். படத்திற்கு பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது. படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர், நடிகைகள் தங்களது நியாயமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு கிளாப்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குநர் தான் சொல்ல வந்த கதையை ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லி வெற்றி பெற்றுள்ளார். பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவே படத்தை கையாண்டுள்ளார். இதுவரை வந்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க ஆகிய படங்களை போன்று இல்லாமல், இந்தப் படம் சில சில மிஸ்டேக்குகளுடன் படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து காட்டியிருக்கிறது. மற்றபடி படத்தை தாராளமாக பார்க்கலாம். இந்தப் படத்திற்கு விஐபி தமிழ் 5க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கிறது.
Absolute thriller 👏 Enjoyed the never before seen side of you as an actor in this movie! congratulations @RJ_Balaji on yet another success.#RunBabyRun pic.twitter.com/bfssjXqDeG
— S.Badrinath (@s_badrinath) February 3, 2023