
சந்தானம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்பு பட நடிகை நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சந்தானம். பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சினிமாவில் தனக்கென்று மார்க்கெட்டை பிடித்த சந்தானம் வருடத்திற்கு 12க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்தார். காமெடியிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இனிமே இப்படித்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம், சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலு குலு என்று ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தற்போது மார்க்கெட் குறைய குறைய வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி நடிகராகவும் நடிக்கத் தொடங்கியுள்ளார். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்தப் படம் வெளியான முக்கியமான அறிவிப்பில் சந்தானத்திற்கு ஜோடியாக சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்த மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட மேகா ஆகாஷின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படம் வெளியாவதற்கு தயாராகியுள்ளது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சந்தானம் நடிக்கிறார் என்று விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
