
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.
ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஆரம்பம், தனி ஒருவன், நானும் ரௌடி தான், டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், பிகில், தர்பார், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், ஓ2, கன்னெக்ட் என்று வரிசையாக ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி லேடி சூப்பர் என்ற பெயரும் பெற்றார். அதோடு, தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும் வலம் வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வாழ்க்கையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவரது நடிப்பில் ஜவான் என்ற ஹிந்தி படமும், இறைவன் என்ற தமிழ் படமும் உருவாகி வருகிறது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் மல்ஹோத்ரா, சுனில் குரோவர், மன்சூர் அலிகான், யோகி பாபு, அஸ்தா அகர்வால், தீபிகா படுகோனே (சிறப்பு தோற்றம்), விஜய் (சிறப்பு தோற்றம்) ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நயன்தாராவும் நடித்து வருகிறார். வரும் ஜூன் 2 ஆம் தேதி ஜவான் படம் திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் நயன்தாரா சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். சத்யபாமா பல்கலைக்கழகம் தங்களது 35ஆவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் நயன்தாராவின் பல்கலைக்கழகத்தின் 35ஆவது ஆண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், வாழ்க்கை என்று வந்துவிட்டால் எல்லோரும் நல்லாத்தான் இருப்போம். வெற்றி நாளைக்கே வரும் போது வருத்தப்பட்ட நேரங்களை நினைத்து கவலைப்படுவோம்.

இன்றைய காலத்தில் நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். கல்லூரியை விட்டு வெளியே சென்றால் எந்த நிலையில் இருந்தாலும், எப்போதும் பணிவாக இருக்க வேண்டும். உங்களது பெற்றோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களது பெற்றோருடன் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும் என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.