
சூர்யா படத்தை இயக்கிய இயக்குநருக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா அண்டகாடு என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பெண் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநரானார். ஆம், ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு நடிப்பில் வெளியான துரோகி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. அதன் பிறகு 6 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இறுதிச் சுற்று என்ற படத்தை கொடுத்தார். அது மட்டுமல்லாமல் இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதும் பெற்றார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு புத்தம் புது காலை என்ற ஆந்தாலாஜி வெப் சீரிஸில் இளமை இதோ இதோ என்ற செக்மெண்டை இயக்கினார். அதே ஆண்டில் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கினார். ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான சைமா விருது மற்றும் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். சூர்யா இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்த நிலையில், படப்பிடிப்பின் போது சுதா கொங்கராவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுதா கொங்கரா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வலி அதிகம் தான். இன்னும் ஒரு மாதத்திற்கு ரெஸ்ட் தான். இது தேவையில்லாத பிரேக் என்று கையில் கட்டு போட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023