
டாடா படம் பார்த்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக் காமெடி படம் டாடா. இளம் காதல் ஜோடியின் காதல் மற்றும் திருமணத்திற்கு முன்னதான உறவு (காமம்) மூலமாக பிறந்த குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. டாடா படத்தில் கவின் உடன் இணைந்து பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ஹரிஷ் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நெக்ஷஸ் விஜயா ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது டாடா டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரில் ஆரம்பத்தில் ஹீரோயினிடம் போலீசார் விசாரணை மேற்கொள்வது, அதன் பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது என்று கூறுவதும், அதன் பிறகு பாக்யராஜ் எண்ட்ரி, கவின் கல்லூரி கதை, விடிவி கணேஷ், நண்பர்களின் உதவி, கவின் மற்றும் அபர்ணா ரொமான்ஸ் என்று எல்லாமே இந்த டிரைலரில் இடம் பெற்றிருந்தது.
இதற்கு முன்னதாக கவின், பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா, லிப்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது டாடா படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஊர் குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார். அபர்ணா தாஸூக்கு இது 2ஆவது படம். இதற்கு முன்னதாக விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். மேலும், நிஞ்சன் பிரக்ஷன், மனோகரம், பிரியன் ஒட்டதிலனு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Also Read – ஆரம்பிச்ச இடத்துக்கே வந்த இயக்குநர்: துருவ நட்சத்திரம் அப்டேட்!
இந்த நிலையில், டாடா படத்தின் Dada Press Show இன்று திரையிடப்பட்டது. டாடா படம் பார்த்த பிரபலங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த இளம் வயதிலேயே இதுபோன்ற கனமான ஃபேமிலி சப்ஜெக்ட்டை தேர்வு செய்து, தன் கேரக்டரில் மிகச்சிறப்பாக நடித்து அசத்திய கவினுக்கு சல்யூட் என்று நடிகர் கயல் தேவராஜ கூறியுள்ளார். உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு ஜாலியான எண்டர்டெய்னர். வாழ்க்கை நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான். இதற்கிடையில் போகாதே பாடலின் புரோமோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.