
வாத்தி படத்தின் இசை வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதில், வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வந்த நானே வருவேன் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.
வாத்தி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். சமுத்திரக்க்னி, தனிகெல்லா பரணி, ஆடுகளம் நரேன், ஹைபர் ஆதி, ஹரீஷ் பேரடி, பிரவீனா, தோட்டாபல்லி மது என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக சூர்யதேவரா நாக வம்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில், வரும் 17 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக தனுஷின் மூத்த சகோதரர் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படமும் வெளியாகிறது. இந்த நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் இன்று நடந்துள்ளது. வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள மொத்த பாடல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வாத்தி படத்தில் வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush #VaathiAudioLaunch #VaathiAlbum currently #Trending #Dhanush pic.twitter.com/cw80z5x79i
— VIP Tamil Online (@viptamilonline) February 4, 2023
Here is #vaathi Full Album for u all … listen now ▶️ https://t.co/gDtkf4GsJg
— G.V.Prakash Kumar (@gvprakash) February 4, 2023
"VAATHI AUDIO CARNIVAL"@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @adityamusic @SitharaEnts @7screenstudio