
பகாசூரன் படத்தில் உள்ள ஆனந்தம் கூத்தாடும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என்று பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகரும் கூட. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தான் அதிகளவில் வலம் வந்துள்ளார்.
Also Read – தமிழ் புத்தாண்டை குறி வைத்த சகுந்தலம் டீம்: இதுல மாற்றம் வருமா?
பீஸ்ட், சாணிகாயிதம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநரான மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பகாசூரன் படத்தில் நட்டி என்ற நட்ராஜ், ராதாரவி, ராஜன் கே, சரவணன் சுப்பையா, குணநிதி, தராக்ஷி, மன்சூர் அலி கான், தேவதர்ஷினி, கூல் சுரேஷ், பி எல் தேனப்பன், சசி லயா, லாவண்யா, பாண்டி ரவி, குட்டி கோபி, அருணோதயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
சாம் சிஎச் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வரும் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படம் உருவான விதம் தீம் மியூசிக்காக வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஆனந்தம் கூத்தாடும் என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஒரு அப்பாவுக்கும், மகளுக்கும் உள்ள பிணைப்பை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.