
தளபதி67 டைட்டில் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் தளபதி67. தற்காலிகமாக தளபதி67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லலித்குமார் தனது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை தயாரிக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் (அன்பு மற்றும் அறிவு) இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்கின்றனர்.

தளபதி67 படத்தில் விஜய் உடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபங்கள் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்காக கிட்டத்தட்ட 180 பேர் கொண்ட படக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு தளபதி67 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று புதிய போஸ்டரை பதிவிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு, விஜய் போஸ்டரில் ரத்தக்கறையுடன் காணப்படுகிறார். பிளாக் அண்ட் ஒயிட் போஸ்டரில் விஜய் கோபத்தோடு காணப்படுகிறார்.
இதற்கிடையில், தளபதி67 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர் நிறுவனமும் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Naanga summave kaatu kaatunu kaatuvom.. 😉#Thalapathy67 TITLE is loading ■■■■■■■□□□ 67%
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
Revealing at 5 PM Tomorrow 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#Thalapathy67TitleReveal pic.twitter.com/FU61rBU55g