
தளபதி67 படக்குழுவினர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படம் தளபதி67. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை லலித்குமார் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்கின்றனர்.
விஜய் நடிக்கும் தளபதி67 படத்தில் அவருடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மிஷ்கின் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இது தவிர கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் ஏஜெண்ட் டீனா ஆகியோர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதியே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடக்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு 180 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானம் மூலமாக காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் படக்குழுவினர் சென்ற வீடியோவை தற்போது தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஒவ்வொருவரிடமும் சென்று நலம் விசாரிப்பதாக தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடக்கும் 2ஆவது கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில். இன்று மாலை தளபதி67 படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான போஸ்டர் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தளபதி67 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனமும் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023