
லியோ படம் வெளியாவதற்கு முன்பே ரூ.246 கோடி வசூல் குவித்துள்ளது.
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது புதிய படம் லியோ. தளபதி67 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு அதிகாரப்பூர்வமாக லியோ என்று தயாரிப்பு நிறுவனம் பெயரிட்டுள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஏஜெண்ட் டீனா என்ற வசந்தியும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு கமல் ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரது பெயரும் இந்தப் படத்தில் அடிபடுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 180 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் காஷ்மீர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு 2ஆவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. கண்டிப்பாக பாடல் காட்சிகள் படமாக்கப்படும். ஏனென்றால், தினேஷ் மாஸ்டர் காஷ்மீர் சென்றுள்ளார்.

இந்தப் படத்தை லலித்குமார் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்கின்றனர். வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சரஸ்வதி மற்றும் விஜயதசமி நாளை முன்னிட்டு லியோ படம் திரைக்கு வருகிறது என்று அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், லியோ படம் குறித்து தான் முக்கிய தகவல் ஒன்று வெளி வந்திருக்கிறது. அது என்னவென்றால், டிஜிட்டல் உரிமை ரூ. 150 கோடிக்கும், ரூ.சேட்டிலைட் உரிமை 80 கோடிக்கும், மியூசிக் உரிமை 16 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக ரூ.246 கோடி வரையில் லியோ படம் வெளியாவதற்கு முன்னதாகவே வசூல் அள்ளியுள்ளது. ஒரு படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னதாக, அதுவும், படம் ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே இவ்வளவு வசூல் குவிப்பது என்பது இதுவே முதல் முறையாகும்.
— Vijay (@actorvijay) February 3, 2023
ஹிந்தி டப்பிங் உரிமை குறித்து தகவல் இல்லை. இதுவும் அதிக தொகை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. காரணம் என்னவென்றால் சஞ்சய் தத் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஆகையால், ரூ.246 கோடிக்கும் அதிகமாகவே இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே வசூல் குவித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக இப்படியொரு வரலாற்று சாதனையை எந்தப் படமும் படைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Youtube Trending – Tamilnadu
— Vijay Fans Trends (@VijayFansTrends) February 4, 2023
Leo Promo – Trending at No1
Leo (T67) Pooja – Trending at No2
Jimiki Ponnu – Trending at No1 for 'Music'
Varisu Trailer – Trending at No1 for 'Movies'
It's @actorvijay Mania 🔥#Leo 🤜🤛 #Varisu pic.twitter.com/GP0RmuwwYR