
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் 2ஆவது வாரத்தில் விஜே விஷால் இம்மூனிட்டி வாங்கியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. யாராக இருந்தாலும் உயிர் வாழ்வதற்கு சோறு தான முக்கியம். சமையல் கலையை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 10 குக் மற்றும் 10 கோமாளி என்று ஒவ்வொருவரையும் தேர்வு செய்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த குக் வித் கோமாளியின் 4ஆவது சீசனில் விஜே விஷால், நடிகை விசித்ரா, ஷிவாங்கி, ஆண்ட்ரியா நௌரிகட் என்ற ஆன்டி (பிரான்ஸ் நடிகை), கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் ஷ்ரிங்கர், ராஜ் அய்யப்பா, நடிகர் காளையன், மைம் கோபி ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கோமாளிகளாக டிக் டாக் புகழ் ஜிபி முத்து, மணிமேகலை, புகழ், சுனிதா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, ரவீனா டாகா, சில்மிஷம் சிவா, தங்கதுரை, முகமது குரேஷி, ஓட்டேரி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் வாரத்தில் நடந்த ஃபர்ஸ்ட் மற்றும் 2ஆவது எபிசோடில் ஓட்டேரி சிவா கலந்து கொண்டார். ஆனால், அதன் பிறகு நடந்த 3ஆவது மற்றும் 4ஆவது எபிசோடில் அவருக்குப் பதிலாக தங்கதுரை கலந்து கொண்டார். காரணம் என்னவென்றால், குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குடித்துவிட்டு வந்ததாக கூறி அவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கியுள்ளது குக் வித் கோமாளி டீம். இதனால் தான் தங்கதுரை டீமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், 3ஆவது மற்றும் 4ஆவது எபிசோடில் பிரியாணி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கை சரியாக செய்து அடுத்த டாஸ்க்கான இம்மூனிட்டு டாஸ்க்கிற்கு 4 அணிகள் சென்றது. அதில், விஷால் மற்றும் குரேஷி, ராஜ் அய்யப்பா மற்றும் சில்மிஷம் சிவா, மைம் கோபி மற்றும் தங்கதுரை, ஷெரின் மற்றும் மோனிஷா ஆகிய 5 அணிகளுக்கு உருளைக்கிழங்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை விஜே விஷால் சரியாக செய்து ஃபர்ஸ்ட் இம்மூனிட்டி சேலஞ்ச் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர்களுக்கு ப்ரிட்ஜ் பரிசாக கொடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர், இதுவரை எனது அம்மா, என்னை கிச்சன் பக்கமே விட மாட்டார்கள். இனிமேல் விடுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
#CookWithComali4 Episode 3
— Shreyas Srinivasan (@ShreyasS_) February 4, 2023
Good one again! Most comalis giving content 👍😎
Manimegalai is back & pair with Sivaangi – That eppudra moment 😂😁
Oru 2,3 cooks thavara mathavanga innum template ku set aagala… Hopefully in coming episodes! 👍 pic.twitter.com/6nVdHhfjzm