
பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து அப்டேட் வந்துள்ளது.
ஒப்பிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் பத்து தல. முஃப்தி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. பத்து தல படத்தில் சிம்பு தாடி, மீசையுடன் கருப்பு நிற வேஷ்டி சட்டையிலேயே நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்பு உடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன், ரெடிங் கிங்ஸ்லி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக கே இ ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்திலால் கட்டா இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து திரைக்கு வருவதற்கு தயாராகியுள்ளது.

முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பிறகு 2023 மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் திரைக்கு வந்த பிறகு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் நம்ம சத்தம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.
பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் யோகி சேகர் இருவரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். அக்கறையில் நிக்குற வரை எட்டுது நம்ம சத்தம் என்ற பாடலின் லிரிக் வீடியோவிற்கு சிம்பு பிளாக் அண்ட் பிளாக் உடையில் நடனம் ஆடி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 18 ஆம் தேதி பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், எங்கு நடக்கும் என்படு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக பத்து தல படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக வெளியாக வாய்ப்பு உள்ளது.
