
விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி குறித்து தகவல் வந்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி ரோலில் நடித்துள்ள படம் விடுதலை. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, ராஜீவ் மோகன், கிஷோர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென் நிறுவனத்தின் மூலம் எல்ரட் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. அதோடு, டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதல் பாகத்திற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி வரும், 8ஆம் தேதி விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. இந்தப் பாடலை தனுஷ் வெளியிட இருக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தில் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். சூரி குமரேசன் என்ற ரோலிலும் விஜய் சேதுபதி டீச்சராகவும் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பீட்டர் ஜெய்ன் சண்டை காட்சிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Viduthalai Part-1 & 2 digital rights go for record price to @ZEE5India, post theatrical.
— Sreedhar Pillai (@sri50) February 5, 2023
💰 @rsinfotainment @elredkumar
A #Vetrimaaran Directorial
An @ilaiyaraaja Musical
Producers @rsinfotainment @elredkumar @GrassRootFilmCo @VijaySethuOffl @sooriofficial pic.twitter.com/22KSSkopnY
With an Intense action scenes choreographed by @PeterHeinOffl,it’s a schedule wrap for #VetriMaaran‘s #Viduthalai.
— Red Giant Movies (@RedGiantMovies_) September 19, 2022
More updates coming soon@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @GrassRootFilmCo @mani_rsinfo @VelrajR pic.twitter.com/N1pViWc3TA