
ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு பார்த்தேன் ரசித்தேன், அற்புதம், முனி, முனி 2: காஞ்சனா, முனி 3: காஞ்சனா 2, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, முனி 4: காஞ்சனா 3 என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸிற்கு பெருமாலும், பேய் படங்கள் தான் அதிக ஹிட் கொடுத்திருக்கிறது.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
நடிகர் மட்டுமின்றி, டான்ஸர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். தற்போது இவரது நடிப்பில் ருத்ரன் படம் உருவாகி உள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. ஃபைவ் ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ருத்ரன் படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் எஸ் கதிரேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சிவஜித், ஷ்யாம் பிரசாத், சரத்குமார், நாசர், பூர்ணிமா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் என்ற பாடனின் சிங்கிள் டிராக் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read – தமிழ் புத்தாண்டை குறி வைத்த சகுந்தலம் டீம்: இதுல மாற்றம் வருமா?
இந்த படத்தில் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பாடாத பாட்டெல்லாம் என்று தொடங்கும் இந்த பாடல் ரீமிக்சில் உருவாகியுள்ளது. இந்த பாடல் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.